பக்கம்:விதியின் நாயகி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 என்கிற உண்மையை மட்டும் என்னல் தட்டிக் கழித்திட இயலவில்லைதான்! - எங்கள் கம்பெனிக்குப் பின்புறம் இருந்த ஒதியஞ் சாலக் குப்பப் பகுதியில்தான் குணசீலனின் குடிசை இருக் கிறதாம்!-அவனே ஒருமுறை சொல்லியிருக்கிருன். நான் அவனை எங்கே கண்டு தேடுவது? எனக்கு இருப்புக் கொள்ளவில்லை!-குணசீலன் ஏன் வேலைக்கு வரவில்லையாம்?? காலம் ஆமையாகிறது!... கூன் பிறை விண்ணிலே தவழ்ந்து விளையாடிக் கொண் டிருந்தது. - . இராச் சாப்பாட்டை முடித்து கம்பெனிக்கு மீண்டேன் நான். மேஜைமீது விரிந்து கிடந்த கணக்குவழக்குகள் எனக்குப் பூச்சாண்டி காட்டின. இதற்கிடையே வீட்டு ஞாபகம் வேறு. வெற்றிலை போட்டுக்கொண்டே, கூடத்துக் கதவை உட்புறமாக நாதாங்கி இட்டு விட்டு, என்னுடைய அறைக்கு வந்தேன். படுக்கையை உதறினேன். .. அப்போது, ஒரு காகிதத்துண்டு மின்விசிறிக் காற்றில் சிதறியதை ஒளிச் சிதறல்கள் சுட்டின. எடுத்தேன்.

  • அன்புள்ள அண்ணுச்சி!
  • ..., ஓடிவந்து உங்கள் காலடியில் விழுந்து புலம்ப வேணு: மென்றுதான் துடித்தேன். ஆளு, எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் உங்களைப் பார்ப்பது? ஆனபடியால், இதை

எழுதுகிறேன். இந்த லெட்டரை நீங்க பார்க்கையில், நான் இந்த உலகத்திலே இருக்கமாட்டேன்! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/54&oldid=476464" இலிருந்து மீள்விக்கப்பட்டது