பக்கம்:விதியின் நாயகி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 என் அம்மாவுக்கு அப்பா துரோகம் செய்தார். என் அப்பாவுக்கு அம்மா துரோகம் செய்தாள். ஆபத்துக்கு உதவி ஒத்தாசை செய்து வந்தார் தங்கசாமி. அந்தக் காரணத்தின் ரகசியம் புரிந்துவிட்டது எனக்கு. அப்பாவ்ை யும் அம்மாவையும் சிறுபிள்ளேயான என்னுல் திருத்த முடியுமா?-நான் தோல்வி அடைஞ்சிட்டேன். அப்பாவும் அம்மாவும் பாவிகள். அந்தப் பாவிகளை ஒரு தொடியில் க்ளோஸ் செய்துவிட முடியும் என்னுலே! - ஆளு, அந்தப் பாவத்தை எந்த ஜென்மத்தில் நான் கழிப்பது? பாவிகளை ரட்சிக்க சிலுவைச் சாமி வருவாராமே? எனக்கு அந்தத் துப்பெல்லாம் தெரியவில்லை! - புரிய வில்லை! நான் சின்னப் பிள்ளை!... மான அவமானத்துக்குப் பயப்படாத என் அப்பாஅம்மாவின் பிள்ளையாக உயிர் தரிக்க என் மனசு ஒப்ப வில்லை!... சாவதற்கா வழி யில்லை இந்த லோகத்திலே? உங்க தம்பியை மறந்திட மாட்டீங்களே, அண்ணுச்சி: இப்படிக்கு, உங்கள் தம்பியான, குணசீலன்.க: வேர்வை ஆடிப்புனலாக ஓடியது. குணசீலா . தம்பி குணசீலா!’ என்று என் உள்மனம் ஓலமிட்டுத் தவித்தது. கண்கள் பொடித்தன. குணசீலன்பால் நான் கொண்டிருந்த பாசம் என்னைப் பைத்தியமாக ஆக்கிவிடுமோ? அந்தப் பிஞ்சு நெஞ்சின் விதி எப்படி விளையாடி விட்டது: - “...' 33.3%

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/55&oldid=476465" இலிருந்து மீள்விக்கப்பட்டது