பக்கம்:விதியின் நாயகி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லட்சாதிபதியான நீக்க எங்கே? பரம் ஏழையான நான் எங்கே?' என்ற வாத்தியாரின் பேச்சை மூட்டை கட்டிவிட்டு, ஜாதக சட்டின் மூட்டையை அவிழ்த்தார். ஜாதகங்கள் பொருத்தம் தாங்கின. 'எல்லாம் அம்மையப்பன் காட்டும் மெய்யன்புதான்; என் செல்வமகள் பூர்வஜன்மத்தில் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!’ என்று ஆனந்தக் கண் ரீைர் மல்கினர் அவர். பெரியவர் பட்டணத்துக்கு விடை பெற்றுப் போன நான்காம் நாள் வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டு, ஒட்டமாக ஓடி வந்தாள் அகிலாண்டம். தந்திச் சேவகன் தின்ருன், கனவுகளை விளையாட விட்ட கயல் விழிகள் கலவர மடைந்தன; சிந்துரரம் தூவிய கன்னங்களில் கறுமையின் நிழல் படர்ந்தது. பயந்துபோனுள் பாவை. கடைசியில், தந்தி யைக் கையொப்பம் செய்து வாங்கிளுள்; உறை கழன்றது. வாசித்தாள். ஒரே கணத்தில் ஆனந்தச் சிரிப்பு கும்மாள மிட்டது. 'என் மகன் சம்மதம். அடுத்த மாசம் ஐந்தாம் தேதி கல்யாணம். பிற நேரில்?’ என்றது தந்தி, 'அம்மா! அம்மா !” அகிலாண்டம் காலத்தின் நடந்த கதையை துண்டுபட நிறுத்திவிட்டு விரைந்தாள். படுக்கையில் உட்கார்ந்து கண் களைக் கசக்கிக் கொண்டிருந்தான் குமார். அப்பா ராத்திரி பேசிளுங்களா, அம்மா?’ என்று ஆதுரத்துடன் கேட்டான். அவள் மறுமொழி புகலவில்லை. இல்லை’ என்பதற்கு அடை யாளமாகத் தலையை அசைத்தாள். - பத்து நாட்களுக்கு முந்தி ராமலிங்கம் எவ்வளவு ஆரோக்கியத்துடன் உலவிஞர்? முகத்தில் தெளிவும், கண் களில் களிப்பும், மேனியில் மினு மினுப்பும் கொண்டு விளங் கினரே அவர்? மயிலாப்பூரிலே அவருக்குத் தொழில். பெரிய ஜவுளிக்கடை. அகிலாண்டம் ஸில்க் எம்போரியம்’ என்ருல், ல்ஸ் முனையில் வெகு பிரமாதம். கடை மூடியானதும் சாவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/7&oldid=476417" இலிருந்து மீள்விக்கப்பட்டது