பக்கம்:விதியின் நாயகி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 : டேப்! ஒரு கால் பிளேட் பிரியாணியும், ஒரு ஆம்லெட். டும் வாங்கியாடா... பசி தாங்கலே... டிக்கட் புக்கிங் முடிஞ்சு தான் வீட்டுக்குப் போக முடியும் போல!...” என்று காரணம் இசால்லி, பத்து ரூபாய்த் தாள் ஒன்றினைச் சுண்டி எடுத்து அவனிடம் நீட்டினர். சங்கிலி வெளியேறி, அந்தக் கிளப்பினுள் நுழைந்து, 'ஆர்டர்’ கொடுத்தான். துரங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பிட்டவர்களும் சாப்பிடப் போனவர்களும், அடங்கிய பசியையும் அடங்காப் பசியையும் மோத விட்டார்கள். சங்கிலி, அந்தக் கல்லாவை-மேஜையை நெருங்கினுன்... பிறகு, 'எனக்கு கால்பிளேட் பிரியாணி... ஒரு ஆம்லெட்...?? என்று சொல்லி, கையிலிருந்த பத்து ரூபாய் நோட்டை நீட்டி ஞன். நோட்டு மேஜை இழுப்பினுள் நுழையவே, பாக்கி சில்லறை குடுங்க...!’’ என்று கேட்டான் அவன். 'இருப்பா!...” என்ற பதில் கல்லாக்காரரிடமிருந்து வந்தது. 'பிரியாணி கால்...ஆம்லெட் ஒண்ணு...எம்பத்தைஞ்சு காசு பில்?’ என்று குரல் கன கச்சிதமாக வந்தது. பையன் பிரியாணி-ஆம்லெட் பொட்டலங்களைக் கையில் வாங்கிக் கொண்டு, 'ஐயா! பத்து ருவா குடுத் தேன்...எண்பத்தஞ்சு காசு போக மிச்சம் தாங்க ஸார்!’ என்று கேட்டான், வலது கையை மேஜையின் தலைப்பு வரை நீட்டியவாறு. - நீட்டி நின்ற கையைத் தள்ளிவிட்டு எங்கிட்டவர் நீ பத்துருபா குடுத்தே? டேய்!...என்னடா டாவு விடறே? என்று கோபாவேசமான குரல் ஒன்று அவனத்தாக்கவே, இக்பிரமை கொண்ட சங்கிலி, நீர் சுரந்த நேத்திரங்களால், நாணயங்களே ஆண்ட அந்த மகானுபாவனை ஏறிட்டும் பார்த்தான். . . . . " : ... ... , . . રું : ; ; ; ; ; 4...Εσπ"...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/75&oldid=476485" இலிருந்து மீள்விக்கப்பட்டது