பக்கம்:விதியின் நாயகி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 'ஏம்பா, ராமு.இந்தப் பய காசு இல்லாம வந்து பொய் சொல்வி, பிரியாணி, ஆம்லெட்டுகளை களவாடிக் கிட்டுப் போக வந்திருக்கான். கேட்டா, பெரிய அரிச்சந்திரன்போல் கதை அடிக்கிருன். எல்லாத்தையும் பறிச்சுக்க, இவனை விரட் டியடி ஊம். சல்தி!?... ஏழை அழுத கண்ணிர் அம்பலம் ஏறுமா? 'ஏய்யா: ஒம்மருக்கு இதயமே இல்லையா?...எம்மாதிரி .பிள்ளை உமக்கும் இருக்குதே ஐயா?. பின்னே, ஏனய்யா என்னைச் சோதிக்கிறீங்க இப்படி?’ என்று நியாயம் கேட்கப் போக, அவனது பிஞ்சுக் கன்னங்கள் இரண்டிலும் கைத் தழும்புகள் பதிந்ததுதான் மிச்சம்! சகடயோகத்தின் அகங்காரச் சிரிப்பில், சங்கிலியின் சட்டைப் பையிலிருந்த பொங்கல் இனம் கரைந்தது! விநாடிகள் ஓடின. புது மானேஜர் நாசூக்காக ஏப்பம் பறித்தார். ஏப்பத் தின் விலை, ரூபாய்: பத்து, காக: எண்பத்தைந்து...! - மூன்ருவது ஆட்டம் தொடங்கச் சில நிமிஷங்களே இருந்தன. சங்கிலி தெம்பை வர வழைத்துக் கொண்டு கடமை புரிந் தான். சாயா கிளாஸ்கள் கைமாறின; சில்லறைக் காசுகள். சட்டைப் பையில் புரண்டன; அடிவயிற்றில் பசி புரண்டது. கண்கள் இருண்டு வந்தன. போட்டுப் புஸ்தகம் பத்துக் காசு!...பாட்டுப் புஸ்தகம் பத்துப் பைசா!...” х தரை மகாஜனங்களிடமிருந்து விடை வாங்கிக்கொண்டு. பெஞ்சுகளுக்கு மத்தியில் டார்வின் தியரி படித்து, கடைசி யாக நாற்காலிகளை நாடின வேளையில், பாட்டுப் புத்தகங் களுக்கு கிராக்கி தட்டவே, உன்னிப்பான பார்வையை நெடு கிலும் ஒட விட்டவாறு நடந்தான். காசுகளே வாங்கிச் சட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/76&oldid=476486" இலிருந்து மீள்விக்கப்பட்டது