பக்கம்:விதியின் நாயகி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-, f :23 ممام

    • ஆம்: நீங்கள்தாம் லாவண்யாவா??......

'இல்லை...அவள் என்தோழி, எதிர்பாராத சில காரணங் களால் அவள் இங்கு வர இயலவில்லை. உங்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துப்போகவே நான் காத்திருக்கிறேன்.” வீடு வந்தது. 'இவள் தான் லாவண்யா, இயற்பெயர் சாந்தினி,’’ என்று அறிமுகம் செய்து வைத்தாள் தோழி. சுதர்சன் வியப்பு விரிந்த கண்களால் ஏறிட்டுநிமிர்ந் தார். அங்கு அவர் மனைவி முறுவல் கோலத்துடன் நாத் காவியில் அமர்ந்திருந்தாள். - 'சாந்தினி, நீ தான் லாவண்யாவா? ஆஹா! நான் பாக்கியசாலி: தோங்கள் எழுதும் கதைகளைப் படித்த என்னையும் எழுத உந்தித் தள்ளிற்று. உங்கள் ஆசியில் வெற்றி கண் டேன். கதைகளே என் தோழியின் வீட்டு விலாசத்திற்கு அனுப்பி வைத்தேன். உங்களை ஒரு நாள் திடீரென்று திகைக் கச் செய்ய வேண்டுமென்றே என் தோழியின் ஒத்திகையின் பேரில் இந்த நாடகத்திற்கு இசைந்தேன். வெற்றி கிட்டி யது... இனி சாந்தினி என்ற பெயரில்தான் நான் கதைகள் எழுதுவேன். திருப்திதானே? சுதர்சனின் நினைவு ஏடுகள் புரண்டன. சுய நினைவு பெற்ருர், அவர் அமர்ந்திருந்த நாற்காலியின் பாதத்தில் கிடந்த சிறு பள்ளமொன்றில் கண்ணிர் வேலி படர்ந்து கிடந்தது. அவர் விம்மினர். - ஐேயோ, சாந்தினி! என்னைப் பிரிந்தாயே கண்ணே!’ எதிரொலித்து முழங்கியது கட்டடம். ஆபீஸ் முடிந்து வீட்டினுள் நுழைந்ததும் ஏன் நுழைந் தோம்’ என்று தான் இருந்தது சுதர்சனுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/89&oldid=476499" இலிருந்து மீள்விக்கப்பட்டது