பக்கம்:விதியின் நாயகி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 24 சுதர்சன் உறவு பூண்டிருந்த அந்த மனம் எங்கோ ஓடியது. கண்கள் எங்கோ ஒடின; விரல்கள், தவழ்ந்து கிடந்த பத்திரி கையின் பக்கங்களைப் புரட்டின. எழுத்தாள ஜோடிஎன்றுபெயர் பெற்ற சுதர்சன்-சாந் திணி தம்பதியில், திருமணமாகி ஒராண்டிற்குள்ளாகவே திருமதி சாந்தினி அவர்கள் உயிர் நீத்தார் என்பதறிந்து மிகவும் வருந்துகிருேம். அவரது ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திக்கிருேம்.' அனுதாபக் குறிப்புக்கள் இப்படி பல: சுதர்சன்-சாந்தினி எழுத்தாளத் தம்பதியாக திகழ்ந் தது, வாழ்ந்தது கதை போலவா? அது உண்மைச் சம்பவம்: லாவண்யா என்ற எழுத்தாளரிடமிருந்து வந்திருந்தது அக் கடிதம். அதில், தன் ைகாண்பதற்கு ஆவல் கொண்டு துடிப்பதாகக் குறிப்பிடப் பீட்டிருந்தது கண்டு சுதர்சனுக்குப் பெருமிதம் பொங்கியது. சொல்லி வைத்தாற்போல, அவர் கதைகள்வெளிவரும் ஒவ்வொரு இதழிலும் லாவண்யாவின் கதைகளும் ஜோடியாக இடம் பெற்ற விந்தையை என்ன வென்று கூறுவது: சீலாவண்யா குறிப்பிட்ட வண்ணம் ராபின்ஸன் பார்க்க கில் சந்திக்கப் புறப்பட்டார் சுதர்சன், லாவண்யா என்ற பெயர் அவரை நொடியில் திகைக்க வைத்தது. எழுதுவது நிஜமாகவே பெண்ணு? பெண்ணின் புனை பெயரில் ஒர் ஆடவனே சிருஷ்டித்திருந்தால்?...' என்று பலவாறு அவர் மனம் குழம்பியது. தண்டரைப் பார்த்து வருவதாகத்தான் சாந்திளியிடம் சொல்லிப் புறப்பட்டார். பூங்காவின் கோடியில் யார் வரவையே எதிர்பார்த்திருப்பவள் போல பெண் ஒருத்தி தின்று கொண்டிருந்தாள். o 'நீங்கள்தான் சுதர்சன் அவர்களா???...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/88&oldid=476498" இலிருந்து மீள்விக்கப்பட்டது