பக்கம்:விதியின் நாயகி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 மான இதயத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அடி. பார்த்து, அடியேடுத்து வைத்தார். அவள் உயிர்த்துனே! - அவருக்கு உள்ளத்தின் உள்ள மாக-உயிரின் உயிராக, துடிப்டின் துடிப்பாக இருந்தவன் சாந்தினி அவரது வாழ்க்கையின் பாதிப் பங்குரிமை பூண்ட் வள்; அவருடைய மறுபாதி அவள், போய் விட்டாள். சுதர்சன் நின்று கொண்டிருந்தார். குல விளக்கு அணைந்து விட்டது: அவர் இருட்டில் தத்தளித்தார். எங்கோ ஒலித்த மாதா கோயில் மணியின் நாத அல்கள் காற்றில் மிதந்து வந்து இரவு மணி எட்டு என்பதைக் காலத்திற்குக் காத்திருந்தவர்களிடம் தெரிவித்தன. இந்தக் கடிகாரங்களுக்கு எத்தகைய கடமையுணர்ச்சி: ‘. . . . . . விடிந்தது, பொழுது. அடுத்த நாள் சுதர்சன் மனித யந்திரமாக இயங்க்த் துளி சக்தி உடலில் பிறந்திருந்தது. எழுந்து நடமாடிஞர். வெறும் உயிர்க் கூடு; அவ்வளவுதான்! - ஜன்னலுக்கடியில் தூசி படிந்த தரையில் பரந்து கிடந்த வற்றை மேஜை மீது அவர் விசிறிப் போட்டது நினவுக்கு வத்தது. கிழிக்கப் படாத உறையிட்ட கடிதங்களையும், கிழிக் காமல் பார்க்கக் கூடிய கார்டுகளையும் அவர் படிக்கவில்லை. தபால் அஞ்சலில் வந்திருந்த சஞ்சிகைகள் சிலவற்றை எடுத்த எடுப்பில் பிரிக்கலானர். அங்கு வந்திருந்த நான்கு பத்திரி கைகளிலும் நான்கு பெயர்கள் 'சாந்தினி வடிவில் அழகு காட்டி நின்றன. அவள் எழுதியிருந்த கதைகள் அந்தப் பத்திரிகைகளில் பிரசுரமாயிருந்தன. அவள் கதாசிரியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/87&oldid=476497" இலிருந்து மீள்விக்கப்பட்டது