பக்கம்:விதியின் நாயகி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iž8 அக்கா திரும்பத் திரும்ப என் மறுமணம்பற்றி நச்சரிப்பதற்கு பூடகமான காரணம்: மாலினிதான் காரணத்திற்குரிய வளா?... மேலே அவர் நினைவுச் சங்கிலி தொடர் சேர வில்லே . ஜுரவேகம் தணித்து வந்தது. மாலினி அவர் அருகேயே இருந்து கொண்டு அவரைக் கண்காணித்து வந்தாள்: வேண் டிய பணிவிடைகள் செய்தான். இவற்றையெல்லாம் கண்ட சுதர்சனுக்கு மனம் குழம்பி வந்தது. அவளது இத்தகைய சிரத்தைக்குக் காரணம் என்னவாயிருக்கு மென்பதையும் அவர் உணரலாளுர். வரவர, அன்று வந்த தன் தங்கை, தமக்கையின் கடிதங்களின பொருளையும் இப்போது அவர் புரிந்துகொள்ளலாஞர். எல்லாவற்றிற்கும் காரணம் மாலினி! அவள் தன் மாமா சுதர்சனுக்கெனக் காத்திருக்கும் கன்னி! இம்முடிவைக் கண்டுபிடிக்க சுதர்சனுக்கு அதிக நேர மாகவில்லை. பெண் உள்ளத்தைப் பல கோணங்களில் ஆரா பும் எழுத்தாளருக்கு இந்த மாலினியின் மனத்தைப் புரிந்து கொள்வதில் வியப்பிற்குரிய தொன்றும் இல்லைதான். 'தம்பி, பல முறை உனக்குத் தபால் போட்டேன்: நீ பதில் ஒன்று கூடப் போடவில்லை. மாலினியை மனசில் எண்ணித்தான் நான் உனக்குப் பல தடவை எழுதினேன். சதா அவள் உன் நினைவாகவே இருக்கிருள். உன்னை தன் கணவனுக அடைய வேண்டுமென்பதே அவள் இலட்சியக் கனவு. சாந்தினியின் இடத்திற்கு அவள் எவ்விதத்திலும் தகுந்தவள். வீட்டில் விளக்கேற்றி வை. உன் வாழ்வையும் வளம்பெறச் செய்வதில் சிந்தனை கொள், தம்பி. சாந்தினி இருந்த இடத்தில் நீ என் மாலினியை அமர்த்திக் கொண் டால், சாந்தினியின் ஆவி எவ்வளவோ சாந்தி பெறும். தம்பி; நல்ல முடிவு சொல்: மாலினி வாழ, உன்னுடன் வாழ நல்ல முடிவு கூறு...சுதர்சன்!...” மங்களம் இப்படிப் பேசிளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/92&oldid=476502" இலிருந்து மீள்விக்கப்பட்டது