பக்கம்:விதியின் நாயகி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 சுதர்சன் வியந்து போளுர், சகோதரியின் ஆதாரமுள்ள அழகான பேச்சைக் கேட்டு. மோலினியைத் தன் இடத்தில் நிரப்பிக் கொண்டால் சாந்தினி மனநிம்மதி பெறுவாளா? நிஜமாகவா? என்றென் றும் நானும் மாலினியும் அவள் நினேவாகவே இருந்துதானே தீருவோம்; அது கண்டு என் சாந்தினி புள கித்துப் போவாள் அல்லவா?’ என்று பலவாறு எண்ணக் கிளிகள் தத்தித் தத்தி ஓடின. அவர் உள்ளத்தில். மாலினியைத் தான் மணப்பதென்ற முடிவு அவர் உள்ளத்தில் உருப்பெற்ற தருணம் அது. பழைய புத்தகங் களைப் பிரித்துக் கொண்டிருக்கையில், சுதர்சனின் பார்வை யில் டயரி ஒன்று பட்டது. அது சாந்தினியினுடையது. பிரித்தார்; ஏடுகள் இதழ் புரண்டன. அதில் ஒரே பக்கத்தில் மட்டும் ஏதோ எழுதப்பட்டிருந்தது. படிக்கலாஞர். “....அத்தான் படுத்த படுக்கையாய்க் கிடக்கிருரே? கடவுளே, என் கணவரைக் காப்பாற்று. எனக்குத் தாலி பாக்கியம் அருள். அவர் ஒருவரே இன்றைய என் கனவு. என்னைச் சுமங்கலியாக வாழச் செய். இல்லையென்ருல் என்னைச் சுமங்கலியாக, மஞ்சளும் குங்குமமுமாகச் சாகச் செய், தாயே. சாந்தினி பிரார்த்திக்கிருள். இந்த அபலையின் பிரார்த்தனை கேட்கிறதா? அவர் பிழைப்பாரா? ஆகா: நானே பாக்கியவதி: சாந்தினி இறப்பதற்கு முதல் வாரம், சுதர்சன் உடல் தலமின்றி இருந்த சமயம், அவள் பெண் உள்ளம் அந்த டயரில் பிரதிபலிக்கப் பட்டிருந்தது. அவள் பிரார்த்தனைஅவள் கனவு-அவள் உள்ளம்! இம் மூன்றின் உயிராக விளங்கிளுளே சாந்தினி?... சுதர்சனுக்குக் கண்கள் இருண்டு வந்தன. - ஆம்; அவள் பிரார்த்தனை ஈடேறியது. அவள் சுமங்கலியாகவேதான் உயிர் நீத்தாள். சாந்தினி, நீ பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/93&oldid=476503" இலிருந்து மீள்விக்கப்பட்டது