பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவலகள் 69 கொடுக்காதவராக வாழ்வதே தமது இலட்சியம்' என்று வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர் வாயே திறக்கவில்லை கதைச் சுருக்கம் பேராசிரியர் நெடுமாறனாரின் புகழ் - அதாவது கல்வியில், இலக்கியத்தில் அவர் அடைந்துள்ள புகழ் எவ்வளவு பெரியதோ அதைவிடப் பெரியது காதல் துறையில் அவர் அடைந்துள்ள புகழ்! கதைகளைக் கவிதைகளைப் படித்து அனுபவித்துப் பிறகு அவற்றை மாணவர்கட்குச் சிபார்சு செய்வதுபோல், கன்னிப் பெண்ணொருத்தியைக் காதலித்து, அதற்குப் பரிசாகக் குழந்தையையும் கண்ட பின்னர், அந்தப் பெண்ணை ஒரு மாணவன் தலையில் கட்டிவிட முயலும் டாக்டர் நெடுமாறனாரைச் சுற்றி ஓர் உலகமே இயங்குகிறது ஆம், உடன் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியை கல்யாணமான கண்ணகி அம்மையாரைத் தம்முடைய காதல் வலையில் சிக்கவைத்து விடுகிறார் நெடுமாறனார். தன் மனைவி மாற்றான் ஒருவனுடன் தவறான நட்பு கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து தற்கொலை செய்து கொள்கிறார் கண்ணகி அம்மையாரின் கணவர் தன் கணவரின் மரணத்துக்கு நெடுமாறனார்தான் காரணம் என்று கண்ணகி அம்மையார் குற்றஞ்சாட்ட மனம் குலைந்த நெடுமாறனார் அமைதிக்காக மது அருந்துகிறார்; நாளடைவில் கண்ணகி அம்மை யாரையும் அதற்கு அடிமையாக்கி விடுகிறார் மதுவின் மயக்கத்தில் இருவரும் அறிவிழந்து முறை தவறி நடந்து கொள்கின்றனர். அதன் விளைவால் ஒருவரைக் கண்டு ஒருவர் பயந்து, அந்தப் பயத்தால் 'யாரை, யார் முதலில் ஒழிப்பது? என்னும் நிலைக்கு வந்து விடுகின்றனர். அத்தருணத்தில்தான் அவர்கள் வாழ்க்கையில் நறுமணம் குறுக்கிடுகிறாள். தாயை இழந்த நறுமணம், தன் தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தனக்காகவும் தன் அண்ணனுக்காகவும் இரண்டாவது மனைவியிடம் தன் தந்தை துன்பப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல், ஒரு விடுமுறையின்போது அண்ணன் தம்பியுடன் பெங்களுரில் வாழும் தாய் மாமன் வீட்டிற்குப் போகிறாள். மீண்டும் வரக்கூடாது என்னும் முடிவோடு. பெங்களுரில் தாய்மாமன் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நறுமணம், ஒரு விடுமுறையின்போது ஒய்வுக்காக டாக்டர் நெடுமாறனார் நந்திமலைக்கு வந்திருப்பதை அறிந்து அவரின் இரசிகை என்னும் பெருமிதத்துடன் அவரை நேரில் காணச் செல்கிறாள் அங்கே டாக்டர் நெடுமாறனார் கண்ணகி அம்மையாருடன் மது