பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநதனின கவிதை உலகம் 87 வசதியும் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகிறது சுவாதீனத்தால் சோம்பேறித்தனத்தையும் சுகானுபவத்தால் சொர்க்கலோக இச்சையையும் வளர்தது வரும அவர்களுடைய பரம்பரை சொத்துகளையும் பாராதீனப்படுத்தி பசிக்குப் பலியாகும் கோடானுகோடி மக்களைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற நோக்கத்தால் எழுந்ததே இந்தப் பசிகோவிந்தம் பாடடு! 'பாரதம் வாழி பாரதம் வாழி பசிகோவிந்தம் பாட பசிதந்த பாரதம் வாழி!" 'தினமணி கதிர் ஏட்டில் மகாபாரதக் கதையை 'பாட்டினில் பாரதம் என்ற பெயரில் காவியமாக எழுதினார் அதைப் படித்த சிலர் காவியம் எழுதும் அளவுக்கு விந்தனுக்கு தமிழில் புலமை உள்ளதா என்று வினாயெழுப்பினர். ஆனால், புலவர் த கோவேந்தன் போன்றவர்கள், உரைநடையை எளிமையாக எழுதியது போலவே காவியத்தையும் எளிமையாக இலக்கணம் பிறழாமல் எழுதுகிறார் என்று பாராட்டினர் 'கதிர் ஏட்டில் 'பாட்டினில் பாரதம் தொடர் வந்து கொண்டிருந்தபோது ஆசிரியர் ஏ என் சிவராமன் விந்தனைப் பார்க்கும்பொழுதெல்லாம் தொடரை பாராட்டுவதோடு "தொடர்ந்து எழுதுங்கள்' என்று உற்சாகமூட்டி பாராட்டுவார் பலரின் பாராட்டுக்குரிய பாட்டினில் பாரதம் இன்னும் நூலாக வரவில்லை