பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 விந்தன 1956இல் விந்தன் பசி கோவிந்தம் என்ற சிறுநூல் எழுதினார் அந்த நூலைப பறறி டாகடர் ஆ. ரா வெங்கடாசலபதி, புலவர் த கோவேநதன் எழுதிய புதுநாநூறு என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னோடடத்தில் குறிப்பிடுகிறார் 'இராஜாஜியின பஜகோவிந்தத்தை நையாண்டி செய்து விந்தன் 'பசி கோவிந்தம் எழுதினார் இராஜாஜி அரசியல் தலைவராகவும் இந்தியாவின் நடுவன் ஆளுநராகவும் இருந்ததால் அவருக்கு இலக்கிய பீடத்தில் இடம் கிடைத்துவிட்டது அவருடைய பஜகோவிந்தத்தை வாங்கு வாங்கு எனறு வாங்குகிறார் இயல்பாகவே விந்தன் ஒரு சிறுகதையோ நாவலையோ எழுதும் போதுகூட ஆசிரியர் கூற்றாகப பகுதிக்கு ஒரு வரியேனும் எழுதி சமூக இழிவுகளையும் ஒழுக்கங் களையும் நையாண்டி செய்யாமல் விந்தனுக்கு கதையை நடத்திச் செல்லத் தெரியாது அப்படி இருக்கையில் நையாண்டி செய்வதற் காகவே எழுதப்பட்ட பகடி நூலில் கேட்க வேண்டுமா? தன்னுடைய நூலைப் புடை நூல் என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார் ‘புடை புடை' என்று புடைத்து விடுகிறார் விந்தன்' 'பசி கோவிந்தத்தில் முப்பத்தியொரு பாடல்கள் இருக்கின்றன உதாரணத்துக்கு சில பாடல்கள் பசிகோவிந்தம் பசிகோவிந்தம் பசிகோவிந்தம் பாடு பரலோகத்தில் இடந்தேடலாம் பசிகோவிந்தம் பாடு! படிக்காதிரு படிக்காதிரு படிக்காதிரு பயலே! படித்தால் எமன் வரும்போதுனைப் பகவான் கைவிடுவார் பணமேனடா பணமேனடா பணமேனடா பயலே? பணத்தாசை வளர்ந்தாலது பணக்காரர் மேல் பாயும்! படுவாய் தினம் படுவாய் தினம் படுவாய் தினம் பாடுபடுவாய் பசித்தாலது பகவான் செயல் பஜகோவிந்தம் பாடு! 'வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் பெருங்கடல் வாலிபம்: பசிமிக்க பாரதத்தில் வறுமைமிக்கோர் அதைக் கடப்பது கடினம், ஆயினும் வயலில் சிறு வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கை யில் சிலர் வாலிபக் கடலைத் தாண்டி விடுகின்றனர் அதற்கேற்ற