பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 திரையுலக நாயகர்கள் வாழ்க்கை வரலாறு பத்து ஆண்டு சினிமா வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்ட விந்தன் சினிமாவை மறந்து மீண்டும் பத்திரிகை துறைக்கு போனபோது ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதரைப் பற்றி எழுதுமாறு பணித்தபோது சற்று தயங்கினார். எனினும், எம்.கே.டி பாகவதரின் சாதனைகளை எண்ணிப் பார்த்து எழுத ஆரம்பித்தார். எம்.கே.டி பாகவதரின் பல சாதனைகளை சுவைபட சொல்லும் இந்த நூலில் இருந்து சில பகுதிகள். எம் கே.டி.பாகவதரைப் பற்றி விந்தன் தான் முதன் முதலில் எழுதினார்.எம்.கே.டி பாகவதரின் படங்களில் துணை நடிகராக நடித்தவரும் பிற்காலத்தில் தமிழகத்தில் முதல் அமைச்சராக வளர்ந்தவருமான திரு. எம்.ஜி.ராமசந்திரன் ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்கு விளக்குகிறார் "பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் திருமதி. டி.ஆர். ராஜகுமாரி அவர்களின் புதுமனை புகுவிழா அன்று சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திரு சி.எஸ். ஜெயராமன் பாடிக் கொண்டிருந்தார் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தார்கள். 'கார்த்திகை விளக்குகள் வைப்பது போல சுற்றிலும் மின்சார விளக்குகள் போடப் பட்டிருந்தன. மூலை முடுக்குகளில் உள்ளவர்கள் முகங்கள் எல்லாம் தெரியும்படியாக அமைக்கப்பட்டிருந்தன. நானும் உட்கார்ந்திருந்தேன். என்னை மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு நான் விளம்பரம் பெறவில்லை. ஆனால் மற்றவர்களின் செயலை, ஆற்றலை கண்டு சிந்திக்கும் மனப்பக்குவம் பெற்றிருந்தேன் சி எஸ் ஜெயராமன் நன்றாகப் பாடிக் கொண்டிருந்தார், மக்களும் வெகுவாக ரசித்து அவ்வப்போது கை தட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது என்ன குழப்பம்? என்று திரும்பி பார்த்தேன். கைதட்டல்கள் ஒலித்தன. ஆமாம், பாகவதர் கூட்டத்தில் ஒரு பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள் அவரைச் சுற்றி ஏதோ ஒரு ஒளி வீசிக் கொண்டிருந்ததாக நான் அப்போது உணர்ந்தேன்.