பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 5 ஒருநாள் சின்னசாமி அறுபத்து நாலு மூட்டைகளுக்கு மேல் துக்கி அடுக்கி விட்டு, ஒரு ரூபாய்க்கு மேல் கூலி வாங்க வந்து விட்டால் செட்டியாரின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு சொட்டுக் கண்ணிர் கீழே விழும். "இந்தத் துக்க நிவர்த்திக்காக அவன் கூலியிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம உண்டிக்கென்று செட்டியார் இரண்டனாவைப் பலவந்தமாக எடுத்துக் கொள்வார். இக லோகத்தில்தான் அவன் தன்னுடன் சமத்துவமாக வாழாவிட்டாலும், பரலோகத்திலாவது வாழட்டுமே!’ என்பது செட்டியாரின் பரந்த நோக்கம்!” செட்டியாருக்குக் கண்ணிர் வருகிறது. நமக்கோ கோபம் கோபமாக வருகிறது. ஆத்திரம் பொங்கி வருகிறது. விந்தன் கதைகளைத் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றுப் படித்து மேலும் மேலும் கோபமும் ஆத்திரமும் அடைவார்களென்றும், அதன் பயனாய்ச் சமூகத்திலுள்ள அநீதிகளையும் கொடுமைகளையும் ஒழிக்க ஊக்கங் கொள்வார்கள் என்றும் நம்புகிறேன். 1946