பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 விந்தன் இலக்கியத் தடம் அவருடைய கதா பாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணித் துக்கமில்லாமல் தவிக்க நேரும். அவ்விதம் வாசகர்களின் மன அமைதியைக் குலைக்கக்கூடிய இயல்பு வாய்ந்த கதைகள்தான் உண்மையான இலக்கியம் என்று தற்காலத்து இலட்சிய புரு ஷர்களும் இலக்கிய மேதாவிகளும் சொல்கிறார்கள். இது உண்மையானால் 'விந்த’னுடைய சிறு கதைகள் உண்மையான இலக்கியம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 'விந்தன் கையாளும் தமிழ் நடை மிகவும் எளிமையான நடை, ஆனால் பெரிதும் சக்தி வாய்ந்த நடை. பொருள் விளங்காத பழைய சங்கத் தமிழ்ச் சொற்களையோ, பொருள் இல்லாத புதிய மறு மலர்ச்சிச் சொற்களையோ உபயோகித்து, அவர் வாசகர்களைத் துன்புறுத்துவதில்லை. வரிக்கு வரி, வாக்கியத்துக்கு வாக்கியம் எதுகை மோனைகளைப் போட்டு நம்மைத் திணற அடிப்பதில்லை; பேச்சுத் தமிழ்’ என்ற பெயரால் படிக்க முடியாத கொச்சைத் தமிழைக் கையாண்டு நம்மைக் கொல்லுவதுமில்லை. தாம் எழுதுவது படிப்பவர்களுக்கு விளங்க வேண்டும் என்னும் நோக்கத்தையே பிரதானமாகக் கொண்டு நடு நிலைமையான பேச்சுத் தமிழ் நடையைக் கையாளுகிறார். மனிதனுக்கு மனிதன் செய்யும் அநீதியையும் கொடுமையையும் எடுத்துக் காட்டும்போது விந்த’னுடைய தமிழ்நடையின் சக்தி உச்ச நிலையை அடைகிறது. உதாரணமாக இதைப் பாருங்கள். “செட்டியார் கடைக்கு வந்து இறங்கும் அரிசி மூட்டை, சர்க்கரை மூட்டை முதலியவைகளையெல்லாம் சின்னசாமி கடை வாசலிலிருந்து தன் முதுகில் சுமந்து கொண்டு போய்க் கடைக்குள் அடுக்கு வான். மூட்டைக்கு காலனா வீதம், எந்தக் காலமாயிருந்தாலும் சரிதான் - சமாதான காலமாயிருந்தாலும் சரிதான் எண்ணிக் கொடுத்துவிடுவார் செட்டியார். ஆனால் என்றைக்காவது