பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 425 பலதரப்பட்ட மாந்தர்களைப் படைத்துத் தம் கதையில் உலவ விடும் விந்தன் கதைகளில், பெண்கள் எங்ங்னம் சித்திரிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவரது 'முல்லைக் கொடியாள் தொகுப்பின் வாயிலாக இக்கட்டுரையில் காணலாம். முல்லைக் கொடியாள் தொகுப்பில் மொத்தம் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 13 கதைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பெண்கள் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் திருமணமாகாத இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என இருவகைப்படுத்தலாம். இளம்பெண்கள் முல்லைக்கொடியாள், மாலினி, கேதாரி, சொக்கி, உமா, நீலா எனும் ஆறு பெண்களும் திருமணமாகாத இளம்பெண்களாவர். இவர்களுடைய சொற்களையும், செயல்திறனையும் அடிப்படையாகக் கொண்டு இவர்களை நாணமிகுந்த நாட்டுப்புறப் பெண், அமைதியும், காரிய சாதனையும் கொண்டவர்கள், துணிச்சல் மிக்க புதுமைப் பெண்கள் என மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம். நாணமிக்க நாட்டுப்புற நங்கை முதல் கதையான முல்லைக் கொடியாளில் கள்ளமற்ற வெள்ளை உள்ளங் கொண்ட நாட்டுப்புற நங்கையைப் படைத்துள்ள விந்தன், கதையில் அவளது பெயரைக் குறிப்பிடவேயில்லை. தனக்கு உதவி செய்ய வந்த பட்டனத்து இளைஞன், உன் பெயா என்ன? என்று வினவும்போது, பெயரில் என்ன இருக்கிறது? என்று அவள் கூறும் பதில், ஆசிரியர் நமக்குக் கூறும் பதிலாகவே தெரிகிறது. அவன், நீ. காதலிக்கவில்லையா? என்று கேட்டதற்கு, ‘எங்க ஊரிலே காதல் எல்லாம கல்யாணத்துக்கு அப்புறந்தான் என்று வெட்கத்துடன் அவள் உரைக்கும் பதில், கண்டதும் காதல் கொள்கின்ற வெகுளித்தனமாகப் பேசும் வெள்ளை உள்ளத்தின் இயல்பை அறியாத பட்டனத்து இளைஞர்களுக்குச் சரியான பதிலடியாய் விழுகிறது. தமிழகக் கிராமங்களில் நாம் காண்கின்ற சராசரிப் பெண்களின் மாதிரிப்படைப்பாக (Typical Character) இடம பெறுகிறாள் முல்லைக் கொடியாள்