பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தனின் ‘சமுதாய விரோதி” - கி. சந்திரசேகரன் சிறுகதை யுகம் இது, எழுத்தாளன் என்ற பெயருக்குத் தகுதியைத் தேடித்தருவது சிறுகதை சிருஷ்டி ஒன்றே என்பது இவரின் கருத்து. கவனித்தோமானால், கலை அம்சங்கள் பெற்றிருப்பது எதுவாயினும், அது இலக்கிய மேதான் என்பது தெளிவுபடும். நாவல்கள் மட்டும் குறைந்ததா? அல்லது கட்டுரை, நாடகம் முதலியவைதாம் தாழ்ந்தவையா? இல்லை, ஒரு சிறு கடிதமானாலும் வாழ்க்கைத் தத்துவம் அதில் ததும்பினால் அதைவிட ரசிக்கக்கூடிய இலக்கியமுண்டோ? தமிழகத்தில் இன்று மலிந்து கிடப்பவை சிறு கதைக் கோவைகள்தாம். இருப்பினும் ஒன்று போல் எல்லாமே நம்மைக் கவராது போகா என்ற எண்ணமும் தோன்றுவதாலேயே, புதிய புத்தகங்கள் வெளி வருவதை நாம் ஆசையுடன் வரவேற்கிறோம். முகத்தைச் சுளிக்காது எதிர் கொண்டழைக்கத் தகுந்தவைகளில் விந்தன் தரும் புத்தகமும் சேர்க்கப்பட வேண்டியது என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுவது போல் வாசகர்களுக்கும் ஏற்படும். ஆழ்ந்த மனச் சுழல்களில் நம்மைச் செருகும் தன்மை பெற்ற இங்குள்ள கதைகளில் சில. ஒரு முறைக்கு இரு முறையாக அவைகளின் கருத்து நம்மைத் துடிக்க வைப்பதற்குக் காரணம் அதுவே அபிப்பிராயத்தின் 6.5msofoff&op13 (Suggestion)