பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விந்தன் இலக்கியத் தடம் 'இது புதுவகையான போலியாக்கம் imitation என்கிறார் டயிச்செஸ். புளும் என்ற நவீன கதாநாயகன் நெருக்கம் நிறைந்த டப்ளின் நகரத்திலே ஒருநாள் பொழுதில் பெறும் அனுபவங்களே நாவலின் உள்ளடக்கம். 1904ஆம் வருடம் ஜூன் மாதம் 16ஆம் திகதி காலை எட்டு மணிக்கு நாவல் தொடங்குகிறது; அடுத்த நாட் காலை இரண்டு மணிக்கு முடிவடைகிறது. ஹோமரின் காவியத்திலே தெய்வச் சீற்றத்தினால் யூலிசிஸ் பத்தாண்டுகள் அலைந்து திரிகிறான். நாவலில் ஒரு நாளில் கதாநாயகனது அருஞ்செயல்கள் முடிவடைகின்றன. அத்தகைய உருவ வேறுபாடுகள் பல இருப்பினும் இரு நூல்களுக்கும் ஒப்புமையும் உண்டு. பழைய கதையை ஆங்காங்கு நினைப்பூட்டும் சொற்களையும் சொற்றொடர்களையும் கையாண்டுள்ளார் ஜோய்ஸ். இன்னொரு உதாரணம் மட்டும் பார்க்கலாம். புகழ்பெற்ற அமெரிக்க நாடகாசிரியர் ஓநீல் (Engene O'Neill 1888 - 1953) உருவகக் குறியீடுகளைப் பயன்படுத்தி நாடகங்கள் எழுதியவர். eysuff slapélu, Mourning Becomes Electra sistsp geolous9 நாடக மூன்றின் தொகுதி, பண்டைய கிரேக்க துன்பியல் நாடக மேதை ஈஸ்கிலஸ் இயற்றிய Oresteia என்ற பழ மரபுக் கதை நாடக மூன்றின் தொகுதியின் புத்துருவாகும். துரோயப் போருக்குப்பின் திரும்பிய கிரேக்கப் பெருந்தலைவனை அவன் மனைவி கிளைட்டெம்னெஸ்டிரா தனது சோரநாயகன் இகிஸ்தஸ் என்பானின் உதவியுடன் கொலை செய்கிறாள். இரண்டாவது பகுதியில், கொலையுண்ட அகமெம்னோன் மகன் ஒறெஸ்டீஸ், தனது தங்கை எலெக்டிராவின் தூண்டுதலினால் தாயையும் அவள் சோர நாயகனையும் கொன்றுவிடுகிறான். மூன்றாவது பகுதியில் ஒறெஸ்டீசைக் கொலைப் பாவம் தொடர்ந்து பற்ற அவன் அலைந்து திரிவதும், இறுதியில் அதென்ஸ்