பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விந்தன் இலக்கியத் தடம் கற்பரசியாக்கிக் காட்டினார். பிற பாத்திரங்களும் அவ்வாறே இலட்சிய வடிவம் பெற்றன. இப்பொதுப் பண்புக்கியைய, வான்மீகியார் காட்டும் அகலிகை மனமறிந்து சந்தர்ப்பம் கிடைத்தபோது சோரநாயகனைக் கூடியவள். வான்மீகியின் வருணனை இயற்கை நவிற்சியுடையதாய்க் காணப்படுகிறது. அந்த வகையில் ப.ரா. கூறியிருப்பது போல 'வான்மீகியின் அகல்யா வழுக்கி விழுந்த ஒரு சகோதரி.” பின்வந்த பக்திக் கவிஞரெல்லாம், பாபியான அகலிகை இராமனது பாதத் தாமரைகள் பட்டுப் பவித்திரமானதைக் கூற முனைந்த வராதலால், வழுக்கி வி ழுந்த, பிரச்சினையை வழுவவிட்டனர். மறுமலர்ச்சி (மணிக்கொடி) எழுத்தாளர்கள் வழுக்கி விழுந்தவளது மனநிலையைத் துருவித் துழாவினரேயன்றி அதனை ஆழ்ந்த கவனத்துக்குரிய சமூகப் பிரச்சினையாக அணுகினார் அல்லர். அவ்வாறு அவர்கள் செய்ய இயலாமைக்குக் காரணமும் கண்டோம். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் களமமைத்துக் கதையெழுதிய விந்தன் காட்டும் கதாநாயகி அகல்யா, நெஞ்சறிந்து பழி ஏற்றுக் கொண்டவள். அவள் வழுக்கி விழுந்தமைக்கு ச் சமாதானம் கூறிச் சமாளிக்க முயலவில்லை ஆசிரியர். அப்படிச் செய்திருந்தால், அவர் படைப்பு, பிந்திய இராமாயணங்களின் நையாண்டிப் போலியாக (Parody) மட்டும் அமைந்திருக்கும். வழுக்கி விழுந்த பின் வாழ முயல்பவள் அவள். அது காரணமாகவே புதுப் புதுப் பிரச்சினைகள் தோன்றுகின்றன. வழுக்கி விழுவதிலும் ஆண்கள் தரம் பார்ப்பதைச் சித்திரிக்கிறார் விந்தன் : ‘சிறிது நேரம் மெளனமாக இருந்த பிறகு, காந்திஜியின் தத்துவத்தில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா? என்று கேட்டுப் பேச்சை மாற்றினாள் அகல்யா. 'உண்டு என்றான் கனகலிங்கம். ' வகுப்பு வெறியின் காரணமாகக் கற்பழிக்கப் பட்ட பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் சொல்லவில்லையா?