பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 39 ' சொன்னார்.’ "அதே மாதிரி நானும் ஏதோ ஒரு வெறியால் கற்பழிக்கப்பட்டவள்தானே! - என்னை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது' என்று கேட்டு, அவள் அவனை மடக்கினாள். "இப்பொழுதான் பிடி கிடைத்தது அவனுக்கு. நீ சொல்வது ரொம்ப சரி; ஆனால் அவர்களுக்கும் உனக்கும் வித்தியாசம் இருக்கிறதே என்றான். "அவள் குறுக்கிட்டு, ‘என்ன வித்தியாசம்? என்று கேட்டாள். "தங்களுடைய விருப்பத்துக்கு விரோதமாக அவர்கள் கற்பழிக்கப்பட்டார்கள்; நீ அவ்வாறு கற்பழிக்கப்படவில்லை? என்றான் அவன். அகல்யாவின் மென்மையான உள்ளத்தில் இது சுருக்கென்று தைத்தது. அதனால் ஏற்பட்ட வேதனையைத் தாங்க முடியாமல் அவள் "கலகல வெனக் கண்ணிர் உதிர்த்தாள்.' வழுக்கி விழுந்த வள் மீண்டும் வாழ முற்படும் போது குறுக்கிடும் தடைகளுக்கு இது ஓர் உதாரணம். கண் கண்ட பிரச்சினைகளுக்கும் காவியத்திற் கண்ட அகலிகை கதைக்கும் இயைபுண்டு எனக் காட்டியதில் விந்தன் நியாயமான அளவு வெற்றி யீட்டிருக்கிறார். ஆனால் விந்தனது முயற்சியும் ஓர் எல்லைக்குள் நின்றுவிட்டது என்றே கூறவேண்டும். அகல்யா தற்கொலை செய்து கொள்வது உள்ளத்தை உருக்குவதாயிருப்பினும், ஆசிரியர் எழுப்பும் கேள்விகளுக்கு ஏற்ற விடையாக, முடிவாக அது அமையவில்லை. அல்லது ஆசிரியர் கேள்விகளைத் தக்கபடி எழுப்பவில்லை என்றும் கூறலாம். விந்தன் காட்டும் அகல்யா அவள் விரும்பும் விதத்தில் வாழ இயலுமா? நானிலத்தின் தீர்ப்பு’ என்பதன் அர்த்தம் என்ன? இவற்றுக்கு நாம் விடை காண்பது இன்றியமையாதது. அடியும் முடியும் - 1970 ©