பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் விந்தன் - கார்த்திகேசு சிவத்தம்பி விந்தன் எனும் புனைகதை ஆசிரியர் (சிறுகதை, நாவல் ஆசிரியர்) பற்றி நோக்கும்போது முனைப்புடன் தெரியும் முக்கிய உண்மை, அவர் மறைந்த காலத்தின் பின்னர் தோன்றிய இலக்கிய வரலாற்று நூல்கள், குறிப்புகளில் அவர் பெயர் இடம் பெறாததும், பெற வேண்டிய அளவு இடம் பெறாததுமாகும். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் விந்தனின் இடத்தைப் பற்றி மதிப்பிடும் குறிப்பினைக் கொண்ட எனது 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் முதலில் விந்தன் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்தது. உண்மையில் இலக்கிய ஆசிரியர் ஒருவரின் மறைவின் பின்னரே, அவர் பற்றிய கணிப்பினைப் பின்னோக்காகப் பார்த்து நன்கு செய்யலாம். அப்படி இருந்தும் விந்தன் மறைப்பு விரும்பியோ விரும்பாமலோ நடந்தேறியேயுள்ளது. விந்தனின் சிறுகதைகளுக்கான மதிப்பீடு ஒரு நூலிலாவது இருக்கின்றது என்ற திருப்தியுணர்வுடன் மேற்சென்று அவரது நாவல் துறை முக்கியத்துவத்தினை நோக்கினால், பாலும் பாவையும் என்ற (தொடர் கதையாக வெளிவந்த) நாவல் பற்றிய குறிப்பு எதனையும், சிட்டியும் சிவபாதசுந்தரமும் எழுதிய ‘தமிழ் நாவல் - நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ எனும் நூலில் காண முடியவில்லை. உயர்கல்வி மட்டங்களில் நடைபெறும் சிற்சில ஆராய்ச்சிகளிற் காணப்படும் தகாத செல்வாக்குகளுக்கு ஆட்படாத ஓர் விமரிசன நூல் என்ற வகையில் இந்த நூலின் ஆசிரியர்களின் கவனத்தைப்