பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 விந்தன் இலக்கியத் தடம் என் மகனுக்கும் ஏற்படுத்திவிட்டுப் போகச் சொல்லுகின்றீர்கள்? அதுவா ஒரு தந்தையின் கடமை என்று நினைக்கின்றீர்கள்? இத்தனை கேள்விகளையும் வாத்தியார் வைத்தியலிங்கம் நம்மை நோக்கிக் கேட்கவில்லை. அவர் செய்த ஒரு செயல் - அவனுக்கு அட்சராப்பியாசத்துக்குப் பதிலாக அவர் செய்ய வைத்த ஆபீசாப்பியாசம் இத்தனை கேள்விகளையும் நம்முள் எழுப்புகிறது. இந்த அரிய சாதனைதான் - விந்த னின் வெற்றிக் கருத்துக்களைப் பிறர் நெஞ்சில் கொண்டு கொட்டுவது பிரச்சாரம்; கருத்துக்கள் அவரவர் நெஞ்சிலேயே மலர்ந்து எழும்படிச் செய்வது கலை, சிறந்த சிறுகதைக் கலைஞர் என்று விந்தன் புகழ்பெற்று விளங்குவது இதனாலேதான். 'ஆபீசாப்பியாசம் விந்தன் கதைகள் என்னும் பெரும்பானைச் சோற்றில் ஒரு சோறு. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதுமல்லவா? சிறுகதைச் செல்வம்