பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விந்தன் இலக்கியத் தடம் விந்தன் கட்டுரைகளில் மிக முக்கியமானது புகையிலையும் புதுமைப்பித்தனும் என்பது. வழக்கமாக எல்லோரும் எழுதுவது போன்ற நினைவு நாள் கட்டுரை அல்ல அது. தமிழ்நாட்டில், திறமை மிகுந்த எழுத்தாளன் அனுபவிக்க நேர்கிற அவலங்களையும், அவன் எழுத்துக்களை வரவேற்று அவனுக்கு உரிய கவனிப்பும் மரியாதையும் அளிக்காத நாட்டு மக்களின் இயல்பையும், அவன் செத்ததற்குப் பிறகு நினைவு நாள் கொண்டாடுவதையும் எண்ணிக் கசப்புற்று, கோபத்தோடு அங்கதமாகச் சாடுகிற தன்மையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. “உலகத்தில் மனிதன் இறப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்கிறான். விஷம் குடிப்பது - வெந்தழலில் தீய்வது - குளத்தில் விழுவது - கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழே குதிப்பது - தூக்குப் போட்டுக்கொள்வது - நாக்கைப் பிடுங்கிக் கொள்வது - கத்தியின் துணையை நாடுவது - காரிலோ, ரயிலிலோ மாட்டிக் கொள்வது - இப்படி எத்தனையோ வழிகள். புதுமைப்பித்தன் இறப்பதற்கு இந்த வழிகளையெல்லாம் கையாளவில்லை. அவர் எழுதினார். ஆம். அவர் வாழ்வதற்காக எழுதவில்லை. சாவதற்காக எழுதினார். எனக்குத் தெரிந்தவரை அவர் செத்துப் போனதற்குக் காரணம் இதுதான்.” விந்த னின் கசப்பும் கோபமும் வேதனையும் எள்ளல் தொனியுடன் வரிக்கு வரி அதிகரித்துக்கொண்டே போகிறது. புதுமைப்பித்தனின் புகையிலைப் பழக்கத்தை குறைகூறியவர்களுக்கு விளக்கம் தரும் விதத்தில் எழுதிவிட்டு, விந்தன் கருதுகிறார் - “சாதாரணமாக, புகையிலை இரசிகர்கள் அதை ஏதாவது ஒரு விதத்தில்தான் உபயோகிப்பது வழக்கம், ஆனால் நம் புதுமைப்பித்தனோ இரண்டு விதங்களில் அதை உபயோகப்படுத்தினார். ஒன்று புகை. இன்னொன்று சாரம்,