பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுயமரியாதைக்காரர்! 99 அடுத்தாற்போல் மிட்டாய்க் கம்பெனியொன்று நாலு வருட காலம் இவருடைய சேவையை உபயோகப்படுத்திக் கொண்டது. அதற்குப் பின் இரவு வாயில் காப்போனாக இவர் ஒரு காரியாலயத் தில் வேலை பார்த்தார். அதிலும் மனம் ஒன்றவில்லை; 'லாபமோ நஷ்டமோ, சொந்த வியாபாரம்தான் நமக்குச் சரி' என்று பொடி கடையை ஆரம்பித்தார். அதைத் தானே டின்களில் அடைத்துக் கடைக்குக் கடை கால் நடையாகவே சென்று விற்றுவிட்டு வந்தார். ஏமாற்றும் பொய்யும் நிறைந்த உலகம் இவரை ஏய்த்தது. எனவே, அதையும் விட்டுவிட்டு அப்பளம் விற்கும் வியாபாரியாக மாறினார். அதுவே தற்போது இவருடைய நிரந்தரத் தொழிலாகி விட்டது. எனவே உலகம் இவரிடம் தோற்றது. அத்துடன், 'உங்களுக்காகத்தான் ஒய்வொழிவில்லாமல் நான் உலகைச் சுற்றிக் கொண்டே இருக்கிறேன்' என்று சூரியபகவா னும் இவரிடம் சொல்ல முடியவில்லை - காரணம், புற விளக்குக் குப் பதிலாக இவர் அக விளக்கை ஏற்றிக்கொண்டு விட்டதுதான்! தந்தை பொன்னுசாமிக்கு ஐந்து குமாரர்கள். அவர்களில் நாலாவது குமாரர். இவர். காலஞ்சென்ற அண்ணன்மார் மூவரும் கடவுளுக்கு அடுத்தபடியாக இவரைச் சோதித்திருக்கின்றனர். அதாவது, தங்கள் மனைவிமார் மூவரையும் அவர்களுக்குப் பிறந்த எட்டுக் குழந்தைகளையும் இந்த அந்தகருடைய பொறுப்பிலே விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். கடைக்குட்டி தம்பியார் இவரு டைய சொந்தக் கிராமமான கூவத்துரிலேயே இருக்கிறாராம். அங்கே தன்னைப் பொறுத்தவரை ஓரளவு வசதியுடன் வாழும், அவர், எப்போதாவது சென்னைக்கு வந்தால் கண்ணிழந்த அண் ாைவிடம் காசுக்குக் கை நீட்டுகிறாராம்-எப்படி அவர் சுயமரி யாதை? 鬱鬱鬱鬱 蠍