பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 விந்தன் கட்டுரைகள் 'பிடிக்காமலென்ன, எந்த விதமான பேதமும் கிடையாது இவரிடம் 'ஒருவேளை பாரதி கண்ட அபேதானந்த சுவாமி'களில் இவரும் ஒருவராயிருப்பாரோ?' என்று எண்ணிக் கொண்டே நான் வெளியே வருகிறேன் Tெண்பது வயதைக் கடந்த ஏழெட்டுப் பெரியவர்கள், 'ஐயா, வணக்கமுங்க' என்று என்னைக் கைகூப்பி வரவேற்கிறார் கள் அவர்கள் யாரென்று தெரியாமல் நான் விழிக்கிறேன் அதை என் விழிகளிலிருந்து தெரிந்து கொண்டு, 'நீங்கதானே மீசைக்கார அய்யரைப் பற்றித் தெரிஞ்சிக்கப் பட்டணத்திலேயிருந்து வந்தி ருக்கீங்க?' என்று கேட்கிறார் அவர்களில் ஒருவர் 'எந்த மீசைக்கார அய்யரை' என்று நான் அப்போதும் ஒன்றும் புரியாமல் கேட்கிறேன் 'அதுதாங்க, பாரதியாரை நாங்க மீசைக்கார அய்யர்'னுதான் கூப்பிடுவோமுங்க 'அப்படியா, நீங்க யாரு?' 'பறையருங்க, குப்பத்திலேருந்து வாறோமுங்க ' 'பறையர்னு சொல்லாதிங்க, அரிஜன்னு சொல்லுங்க' நான் திருத்துகிறேன். 'அந்தப் பேரு எங்க மீசைக்கார அய்யருக்குப் பிடிக்காதுங்க, 'அது என்னப் புதுப் பேரு?'ம் பாருங்க' 'சரிதான், அந்த விஷயத்திலே உங்க மீசைக்கார அய்யர் அம்பேத்கார் கட்சிபோல இருக்கு'