பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விந்தன் கட்டுரைகள் தங்களுக்காக மட்டுமா? - இல்லையில்லை, மனிதவர்க்கம் முழுவதற்குமாக! இத்தகைய காதலர்கள் கடைசியில் கல்யாணமாவது செய்து கொள்கிறார்களா என்றால், இல்லை, தற்கொலையாவது செய்து கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை! நீண்டகால விசார ணைக்குப் பிறகு ஆயுள் தண்டனை அடைந்த அவன் சைபீரியா வுக்கு (அந்தமான் தீவு போன்றது) அனுப்பப்படுகிறான் அதற்குப் பின் அவனுடைய தாயைச் சந்தித்த அவள் கேட்கிறாள். 'என்ன தேசாந்தரமா சைபீரியாவுக்கா? "ஆமாம், ஆமாம்' என்று சொல்லிவிட்டு, அந்தத் தாய் கேட்கிறாள் 'நீ எப்போது போய் அவனோடு சேரப் போகிறாய்?'-அவள் சொல்கிறாள்: 'நானும் ஒரு தண்டனையை எதிர்நோக்கித்தான் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், அநேகமாக அவர்கள் என்னையும் சைபீரியாவுக்குத்தான் அனுப்புவார்கள். அப்போது அவரை அனுப் பிய இடத்துக்கே என்னையும் அனுப்பிவிடுங்கள்!' என்று நான் அவர்களைக் கேட்டுக்கொள்வேன்' இதைக் கேட்டதும் தாயின் உள்ளம் உருகுகிறது. 'உனக்கு ரொம்ப சிரமமா யிருக்குமே!' என்று அவளைக் கட்டித் தழுவிக் கண்ணி வடிக்கிறாள். யார் இந்தத் தாய் - இந்தத் தாய்தான் மனிதாபிமானம் மிக்க மாக்ஸிம் கார்க்கியின் தாய் மாக்ஸிம் கார்க்கியின் தாய் என்றால், அவனைப் பெற்றெடுத்த தாய் இல்லை அவனால் பெற்றெடுக்கப் !தாய் سكانها ஆம். உலகப் பிரசித்திபெற்ற 'தாய்' என்னும் அவனுடைய நாவலில்தான் வருகிறார்கள், மேலே குறிப்பிட்ட லட்சியக் காதலர் காான பாவெலும் லாஷாவும். 'இமயமலை வீழ்த்தது போல...' என்று எக்காளத்தோடு பாடினானே பாரதி - அந்த ஜார் அரசனின்