பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை 49 பார்க்கப் போனால் உங்களைப் பற்றிக் குறை கூறித்திரியும் மகானுபாவர்கள் இதுவரை உங்களுக்காக என்னத்தைச் செய்து குவித்து விட்டார்கள்? உலக இலக்கியங்களிலே, உலக மொழிகளிலே எத்தனை எத்தனையோ விதமான புதுமைகள், புரட்சிகள் தினந்தினம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன-ஏன், நம்மை அடுத்திருக்கும் கேரள நாட்டின் மலையாள இலக்கியங்களிலும், ஆந்திர நாட்டின் தெலுங்கு இலக்கியங்களிலும் கூட அவற்றை நாம் பார்க்கிறோம், பார்த்துப் பெருமூச்சு விடுகிறோம். அப்படியிருக்க, தமிழும் தமிழ்நாடு மட்டும் பழமை என்னும் குட்டையில் ஏன் இன்னும் மட்டை போல் ஊறிக் கொண்டிருக்க வேண்டும்? l காரணம் இருக்கிறது-ஆம், காரணம் இருக்கத்தான் இருக்கி றது. அன்றிலிருந்து இன்றுவரை சில 'சைத்தான்'கள் தமிழ் நாட்டு இலக்கியப் பீடத்தைப் பற்றிக் கொண்டு நாசம் புரிந்து வருகின் றன. எதையெல்லாமோ 'புதுமை, புதுமை' என்று கூறிக் கொண்டு அபத்தங்களை, அலங்கார வார்த்தைகளை அள்ளி அள்ளி வீசி, 'குடும்பக் கதைகள்' என்ற பேரிலே, 'ஜீவனற்ற இலக்கியங்களைப் படைத்துக் குப்பைகளைக் குன்றுகளாகவும், கோபுரங்களாகவும் உயர்த்திக் காட்டி, உங்களிடமிருந்து அவை உபாதானம்' பெற்று வருகின்றன. இந்தச் செயலற்ற தனத்தைக் கண்டு நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்-இருந்தாலும், மேற்படி உபாதானத்'தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் தமிழ் மொழி வளராது. தமிழ் இலக்கியமும் செழிக்காது. எனவே, போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க் கையை அலசி அலசிப் பரிசீலிக்கும் 'ரஸாயன'ங்களை, சமுதாயத் தின் புற்று நோய்களுக்கு 'மின்சார சிகிச்சை யளிக்கும் புத்தம் புதுமுறைகளை, ශුෂ7 வசீகரங்களைப் படம் பிடித்துக் காட்டி மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது,