பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழலும் உலகிலே 61 என்று அடுக்க ஆரம்பித்துவிடுவார், உங்களுடைய மனைவி வேறு, என்னுடைய மனைவி வேறா, என்ன? என்பதை மட்டும் போனாற் போகிறதென்று விட்டுவிட்டு: இத்தகைய 'ஹை சர்க்கிள்'களுக்கு ஏழை எளியவர்களிடம் இரக்கமோ, இதயமோ, இதயம் ஒன்றிய ஈடுபாடோ இருக்க முடியுமா?-இருக்காது, இருக்க முடியாது. ஆயினும் எழுத வேண்டுமென்ற ஆசை, இவர்களுக்கு - ஏன்?-பெருமைக்காக தனக்குத் தெரிந்த நாலுபேராவது தன்னைப் புகழ வேண்டுமே என்பதற்காக. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இவர்களுக்குப் பெரும்பாலும் உதவியாயிருப்பது ஆங்கிலப் பத்திரிகைகள், ஆங் கிலப் புத்தகங்கள் அவற்றை வாங்கி விழுந்து விழுந்து படிப்பார் கள் படிக்கும்போதே தங்களுக்குப் பிடித்த கதையம்சத்தைக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார்கள் - அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? அந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டே கதை எழுத ஆரம்பித்து விடுவார்கள். இந்த நிலை இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னால்தான் இருந்தது என்றால், இப்போதுமா இருக்க வேண்டும்? தமிழில் சுயமாகச் சிந்திக்கவும், சுயமாக எழுதவும் ஒரு சிலராவது தோன்றி விட்ட இந்தக் காலத்திலுமா இருக்க வேண்டும்? - வெட்கக்கேடு, தமிழ் இலக்கியத்தைப் பிடித்துவிட்ட சாபக்கேடு இல்லாவிட்டால் தமிழ்ப் பத்திரிகை உலகில் இந்த இலக்கிய விவகாரம் தொடர்ந்து இடம் பெற்று வருமா? ஆம், சமீபத்தில் கூட எதோ ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் வெளியான தொடர் கதையில் நான் இந்த அக்கிரமத்தைக் கண்டேன்- என்னத்தைச் சொல்வது போங்கள், ஜமீன்தார்கள் தம் நாட்டை விட்டு ஒழிந்தாலும் இலக்கியத்தை விட்டு ஒழியமாட்டார் கள் போலிருக்கிறது-சந்தேகமென்ன, அது ஒரு ஜமீன்தார் கதை ஆங்கில நாவல் ஒன்றில் வந்த பிரபு அதில் ஜமீன்தார்"ராக்கப் பட்டு இருந்தார்: இது போன்ற களவாணி இலக்கியங்க'ளின் கர்த்தாக்கள் இருக்கிறார்களே, இவர்கள் பெரிய பேர்வழிகள் - இவர்களு டைய நண்ட, உடை, பாவனை, பேச்சு, சிரிப்பு எதுவுமே