பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விதி வென்றதா?

99

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. வளர்பிறைபோல ரவி வளர்ந்து வந்தான். உயரத்தில் மட்டுமல்ல; அறிவிலும்தான்!

மேற்படிப்பை முன்னிட்டுச் சென்னைக்கு வந்தான் ரவி. தட்டிக் கேட்க ஆளில்லாத ‘ஹாஸ்டல்’ வாழ்க்கை கூட அவன் மனத்தை மாற்றவில்லை; எப்பொழுதும்போல் அப்பொழுதும் அவன் உள்ளத்தில் ஏழைச் சுப்பனின் குடும்பம் இடம் பெற்றிருந்தது. அவர்களுடைய விதி அவனை வதைத்துக் கொண்டிருந்தது.

கடைசியில் என்ன?

அவன் போட்ட புள்ளியும் மாறவில்லை; வைத்த எண்ணமும் அவனை மாற்றவில்லை. காரியம் எப்படியோ கைகூடி விட்டது.

* * *

ஸ்டர் விடுமுறையின்போது கிராமத்துக்கு வந்திருந்தான் ரவி. அவன் வந்ததும் வராததுமாக “ரவி சுப்பன் சமாசாரம் தெரியுமோ? அவன் விதியை வென்று விட்டான் இப்பொழுது அவன் நிலமும், நீரும், வீடும் வாசலுமாகச் செளக்கியமாயிருக்கான். தொப்பைக் கையிலிருந்த கோலை தூக்கித் தூர எறிந்துவிட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டான், படிப்பதற்கு!” என்றார் தகப்பனார்.

“விதியையாவது, அவன் வென்று விட்டதாவது? கடவுள் கண்ணைத் திறந்தார் என்று சொல்லுங்கோ” என்றாள் தாயார்.

ரவிக்குச் சிரிப்பு வந்தது.

“கண்ணைத் திறந்தது அந்தக் கடவுள் இல்லை, அம்மா இந்தக் கடவுள்” என்று தன்னைத்தானே அவன் சுட்டிக் காட்டிக் கொண்டான்.

“என்ன!” என்று இருவரும் அவனை ஏக காலத்தில் பாதாதிகேசம் வரை பார்த்து விழித்தனர்.

“ஆமாம், அம்மா! நான்தான் இத்தனை வருஷ காலமாக நீங்கள் என் செலவுக்காகக் கொடுத்த பணத்திலிருந்து கொஞ்சம் பிடித்துச் சேர்த்து வைத்துச் சென்ற வருஷம் தான் அவனுக்கு ஒரு காணி நிலத்தையும் ஒரு ஜோடிமாட்டையும் வாங்கிக் கொடுத்தேன். அதைக் கொண்டு தான் அவன் விதியை வென்று விட்டான்! உண்மை இது தான்; வேண்டுமானால் யாருக்கும் புரியாத அந்தரார்த்தம் தத்துவார்த்தமெல்லாம் செய்து பொறுப்பை ஆண்டவன் தலையில்