பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காரியவாதி

195

நெசந்தான் அம்மா, நெசந்தான். ஆனா, உலகத்திலே அண்ணன்தான் நல்லவனாயிருக்க முடியுமே ஒழிய, அவனுக்கு வந்தவகூட நல்லவளாயிருக்க முடியுமா? நீயே யோசித்துப் பாரு!-அதுதான் நான் சொல்றேன்; என்னமோ கடவுள் கொடுத்த கையையும் காலையும் வச்சுக்கிட்டு நீபாட்டுக்கு இருக்கிறதுதான் நல்லது. உன்னுடைய அண்ணன் தொல்லை தொந்தரவு இல்லாமல் இன்னும் கொஞ்ச நாளைக்கு உலகத்திலே இருக்கணும்னா அப்படிச்செய்; இல்லேன்னா வேணாம்!"

இதற்குப் பொன்னி என்ன மறுமொழி சொல்வாள்? "அப்படியே ஆகட்டும், அண்ணாச்சி" என்றாள்.

அவன் போய்விட்டான். பேதை பொன்னி அந்தக் கறவை மாட்டையே கடைசி வரை நம்பினாள். அது கருவுற்றபோதும், "இன்னும் பத்து மாதம் பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளி விடுவோம்" என்று ஆறுதல் அடைந்தாள்.

* * *

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. பத்தாவது மாதமும் பிறந்தது, அந்த மாட்டுக்கு ‘அப்பாடி’ என்று பெரு மூச்சு விட்டாள் பொன்னி.

“அந்த நாள் என்று வரும், அந்த நாள் என்று வரும்?" என்று அவளுடைய உள்ளம் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது. கடைசியில் அந்த நாளும் ஒரு நாள் வரத்தான் வந்தது. ‘என்ன ஆகுமோ?’ என்று அவள் ஏங்கினாள். நல்ல வேளை அவளுடைய ஏக்கம் துக்கத்தில் முடியவில்லை; எருமைான்றது.

பொன்னிக்கு மட்டில்லாத மகிழ்ச்சி பொழுது புலர்ந்ததும் புல்லினங்கள் அடையும் ஆனந்தத்தை அவள் அடைந்தாள். அவளுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் ஒரு புது அத்தியாயம் ஆரம்பமாயிற்று.

"தினந்தோறும் "பாலோ, பாலு" - "தயிரோ, தயிரு!" - “மோரோ, மோரு" -" நெய் வாங்கலையா, நெய்!" என்று வேளைக்கு வேளை அந்தக் கிராமத்தின் எட்டுத் திக்கும் எதிரொலி செய்ய இரைந்து விற்றுவிட்டு வந்தாள்.

நாளடைவில் ஒரு எருமை இரண்டு எருமைகளாகி, இரண்டு மூன்றாகி, மூன்று நான்காகவே ஆகிவிட்டன. காதில் அணிந்திருந்த