பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோறும் சுதந்திரமும்

279


"அப்படி என்ன சோதனைகள், ஐயா?"

"சில சமயம் எங்கள் எஜமானர்களுக்கு ஏதாவது பொழுது போக்கு வேண்டியிருக்கும். அப்பொழுதெல்லாம் அவர்கள் என்ன செய்வார்கள், தெரியுமா? சிங்கம், புலி முதலிய பயங்கரக் காட்டு மிருகங்களோடு எங்களைச் சண்டையிட வைத்து வேடிக்கை பார்ப்பார்கள் - அதுவும் எப்படி? சண்டைக்கு விடுவதற்கு முன்னால் கூண்டிலிருக்கும் சிங்கத்துக்கோ, புலிக்கோ இரண்டு மூன்று நாட்கள் தீனி எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்திருப்பார்கள்...."

"ஏன் அப்பொழுது தான் நீங்கள் அதனுடன் சண்டையிட்டு ஜயிக்க முடியும் என்றா...?"

"ஜயிக்கவாவது, கியிக்கவாவது பசி எவ்வளவுக் கெவ்வளவு அதிகமா யிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரத்தில் அது எங்களை தீர்த்து விடும் என்றுதான்!”

"நிஜமாகவா?"

"ஆமாம், அப்பனே! நாங்கள் அதற்குத் தயாராக இருக்கவில்லை யென்றால் எஜமானர்களே எங்களை தீர்த்து விடுவார்கள் சொல்லப் போனால் நாங்களும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை; 'எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் அந்த மனித அரக்கர்களிடமிருந்து விடுதலை கிடைக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு நல்லது' என்று எண்ணி, இந்த ஜன்மத்தை உயிரோடு மறந்து விடுவோம்"

இந்தக்கதையைக் கேட்டதும் இந்தியன் ஒரு பெருமூச்சு விட்டு, "இதே மாதிரி எங்களுடைய முதலாளிகளும் எங்களைச் சண்டையிட வைப்பதுண்டு; ஆனால் மிருகங்களோடு அல்ல; மனிதர்களோடு....!" என்று சொல்லித் தன் கதையை ஆரம்பித்தான்.

"என்ன! உங்கள் தேசத்தில் மனிதர்களோடு மனிதர்களா சண்டையிடுவீர்கள்?" என்று நீக்ரோ வியப்புடன் கேட்டான்.

"ஆமாம், வேலையில்லாதவர்களோடு வேலையிருப்பவர்களைச் சண்டையிட வைத்து, எங்கள் முதலாளிகள் வேடிக்கை பார்ப்பார்கள். அதுதான் அவர்கள் பொழுது போக்கு"

"அது எப்படி?”

"லாபத்தில் நஷ்டம் வரும் என்று தோன்றும் போதெல்லாம் அவர்கள் எங்களுடைய கூலியைக் குறைக்கப் பார்ப்பார்கள்; அல்லது எங்களில் சிலரை வேலையிலிருந்து நீக்கப் பார்ப்பார்கள். இந்த அக்கிரமத்தை எதிர்த்து நாங்கள் வேலை நிறுத்தம் செய்வோம். அந்தச்