பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

விந்தன் கதைகள்

"அதை எடு, பார்ப்போம்?”

"இதோ பார், அப்பா!"

"என்ன அது?"

"கடிதாசி!"

"அந்த ‘டார்ச்'சை இந்தப் பக்கமாகக் கொஞ்சம் காட்டு - கடிதாசியிலே என்ன எழுதி இருக்குதுன்னு பார்ப்போம்!”

“போலீஸ் ஜவான்களுக்கு என்னை யாரும் குளத்தில் தள்ளவில்லை; நானேதான் என்னைத் தள்ளிக் கொண்டேன். காரணம் என்னவென்று தெரிந்து நீங்கள் இனிமேல் செய்யப்போவது ஒன்றுமில்லை. இந்தக் கடிதம் எதற்காக வென்றால், நீங்கள் அனாவசியமாக துப்பு விசாரித்து அவதிப்பட வேண்டாம் என்பதற்கே! - கண்ணுச்சாமி!”

"ஐயே, இவரு தற்கொலையில்லே பண்ணிக்க வந்திருக்காரு?”

“சரிசரி, நமக்கு ஏன் இந்த வம்பு ஸ்டேசனுக்கு இழுத்துக்கிட்டுப் போயிடுவோம்!”

இது போலீஸாரின் முடிவு.

* * *

அடுத்த சில தினங்களுக்கெல்லாம் கண்ணுச்சாமியின் தற்கொலை வழக்கு நீதி மன்றத்தில் வழக்கம்போல் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கண்ணுச்சாமியிடம் அனுதாபம் கொண்ட தோழர்களில் சிலர், ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, அவனுக்கென்று ஒரு வக்கீலை நியமித்தனர்.

அந்த வக்கீல் தன் கட்சிக்காரன் தற்கொலை செய்து கொள்வதற்காகக் குளத்தில் குதிக்கவில்லை என்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் தேட முடியுமோ, அத்தனை ஆதாரங்களையும் தேடி எடுத்துக் காட்டி வாதித்தார்.

சர்க்கார் தரப்பு வக்கீலோ, கண்ணுச்சாமி தற்கொலை செய்து கொள்வதற்காகத்தான் குளத்தில் குதித்தான் என்பதற்கு என்னென்ன