பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவன் கேள்வி

289

நின்றபடி யோசித்தான். யோசித்தான் - அப்படி யோசித்தான்.

பிறகு, தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சென்று தன்னுடைய நிலைமையைச் சொல்லி, "இந்தச் சமயத்தில் எனக்கு உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்று கல்லுங் கரைந்துருகுமாறு கேட்டான்.

நாளையிலிருந்து 'ஸ்டிரைக்' அல்லவா? ஆகவே, எல்லோரும் ஏகோபித்துக் கையை விரித்துவிட்டார்கள்.

நடைபாதை ஒன்றுதான் அவனுக்கு வஞ்சனையில்லாமல் வழி விட்டுக் கொண்டேயிருந்தது; மீண்டும் நடந்தான்!

ஒரு குளம் குறுக்கிட்டது; அதைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது.

சட்டையைக் கழற்றிக் கரையில் வைத்தான். நல்ல வேளையாக அன்றுவரை தான் நீந்தக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நினைத்துச் சந்தோஷப்பட்டான்.

அடுத்த நிமிஷம் ‘தொபுகடீர்' என்று ஒரு சத்தம்; அவன் குளத்தில் விழுந்தேவிட்டான்!

"யார் அது ?"

"மணி பத்துக்கு மேலாகிறதே! இந்நேரத்தில் குளத்தில் குதிப்பானேன்?”

இது அவ்வழியே வந்துகொண்டிருந்த போலீஸாரின் பேச்சு

இருவரும் உடனேகுளக்கரையை நெருங்கினர்; திக்குமுக்காடும் கண்ணுச்சாமியைக் கண்டனர். கரையும் சேர்த்தனர்.

கண்ணுச்சாமி வாழ்க்கையை வெறுத்தான்; ஆனால் வாழ்க்கை அவனை வெறுக்கவில்லை!

“என்னப்பா, யாரையாவது தீர்த்துப்பிட்டு வந்து குலுத்திலே குளிக்கிறியா, என்ன?”

"கையிலே ஏதாச்சும் கத்திகித்தி இருக்குதான்னு பார், அண்ணே"

“கையிலே ஒண்ணுமில்லே, சட்டையைத்தான் இங்கே கழற்றி வைத்திருக்கிறான்!"

வி.க. -19