பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

விந்தன் கதைகள்

தமக்கிருந்த ஒரே செல்வத்தின்வாய் அந்த ஒரே வார்த்தையைத் திருப்பி திருப்பி முணுமுணுப்பதை கேட்டதும் அவருக்கு திக்கென்றது. அத்துடன் அந்த மூங்கில் பாலத்துச் சம்பவமும் அவருடைய நினைவுக்கு வந்தது.

"அவன் யாரோ!"

"அவன் யாரோ!

பையனைப் போலவே அப்பாவும் இப்போது அந்தச் சர்வ சாதாரணமான வார்த்தையை அடிக்கடி முணுமுணுத்தார்.

இப்படித்தான் அப்பா எல்லோரும் சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்- அவர்களில் நானும் ஒருவன் அல்லவா? அவர்களைப் போலவே நானும் மனிதன் அல்லவா?” என்றான் பையன்.

ஆம்; இனி நீ மட்டும் அல்ல. நானும் மனிதன், நாம் அனைவரும் மனிதர்கள்!" என்றார் அப்பா.