பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

541

விந்தன் கதைகள்

தெரிந்திருக்கலாம். நாளைக்கு அவர்களால் நமக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்?"

"அதற்காக நம் கண்ணுக்கு முன்னால் ஒருவன் கொல்லப் படுவதை நாம் பார்த்துக் கொண்டா இருப்பது?"

"கவலைப்படாதே! இப்பொழுது தெல்லாம் குறைந்த பட்சம் ரூபாய் இரண்டாயிரத்துக்கு ஒவ்வொரு தொழிலாளியின் உயிரும் 'இன்ஷ்யூர்' செய்யப்படுகிறது!"

"எல்லாம் அந்த படுபாவியால் வந்தவினை! “உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே, உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே!" என்று அவன் ஓயாமல் எழுதுவதை விழுந்து விழுந்து படித்து விட்டு..."

"அது எந்தப் படுபாவி?"

"அவன்தான்! வள்ளுவனுக்குப் பின்னால் வந்த கிள்ளுவன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறானே, அவன்தான்!"

"பிழைப்பின் ரகசியத்தையே கண்டுபிடித்துவிட்ட பேராசிரியரல்லவா அவன்? அவருடைய வாக்கு வரப்பிரசாதம்; வாழ்வு வழிகாட்டி..."

"யாருக்கு? உணர்ச்சியைப் பொருட்படுத்தாத கொலைகாரர்களுக்கு; கொள்ளைக்காரர்களுக்கு; ஏமாற்றுக்காரர்களுக்கு!"

"அவர்களுக்காவது சட்டத்தைப் பற்றிய அச்சம் ஓரளவாவது இருக்கலாம்; நம்மைப் போன்றவர்களுக்கு அது கூட அவசியமில்லையே; அவருடைய அறிவுரைகளைக் கேட்டால்?"

"மகிழ்ச்சி; அவருடைய அறிவுரைகளைக் கேட்பதற்காக நீங்கள் அறிவில்லாமல் இருப்பது பற்றி?"

இந்தச் சமயத்தில் "ஏண்டா, சோம்பேறிப் பயல்களா? எவனாவது மாதம் பூராவும் உழைத்துச் சம்பளம் வாங்கிக் கொண்டு வர வேண்டியது. அதை நீங்கள் எந்த விதமான உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காமல் அடித்துப் பிடுங்கிக் கொள்ள வேண்டியது. இது ஒரு பிழைப்பா? உங்களுக்கு வெட்கமில்லை? மானமில்லை? மரியாதையாய் அவன் சம்பளத்தை அவனிடம் கொடுத்து விட்டு போங்கடா!" என்று யாரோ ஒரு மூன்றாவது மனிதன் குறுக்கிட்டு விரட்ட, "நீ யார் அதைக் கேட்க?" என்று வழிப்பறிக்காரர்களில் ஒருவன் அவன் மேல் பாய, இருவரும் கட்டிப் புரளும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தது.