பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



85

பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் சுந்தர புருஷனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

"பாவம், ஏழைக் குடியானவனான அவனுக்கும் இன்றிரவு தூக்கம் பிடிக்கவில்லை போலும் இந்தப் பாழும் வெண்ணிலவு யாரைத்தான் சும்மாவிடுகிறது? நம் மனைவிதான் ஊருக்குப் போயிருக்கிறாள்; அவன் மனைவியும் ஊருக்குப் போயிருக்கிறாளோ;-ஆமாம்; அவனுக்கும் நமக்கும் வேறு எத்தனையோ விஷயங் களில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஈ, எறும்பு முதல் எண்ணாயிரம் ஜீவராசிகளும் ஒன்றே!"

இப்படி நினைத்தானோ இல்லையோ, சுந்தர புருஷன் தடதட'வென்று மாடியை விட்டுக் கீழே இறங் கினான். நேரே அந்தக் குடியானவனிடம் சென்றான். உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடனும், உள்ளத்தில் பொங்கிவரும் உவகை யுடனும், நீ ஏன் இன்னும் தூங்கவில்லை? உன்னையும் இந்தப் பால் நிலவு பாடாய்ப் படுத்துகிறதா?’ என்று கேட்டான்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க; தூக்கம் வரலீங்க!"என்றான் அவன் கொட்டாவி விட்டுக் கொண்டே.

"ஏன் உன்னுடைய மனைவியும் ஊருக்குப் போயிருக்கிறாளா?"

இதைக் கேட்டதும் அந்த குடியானவன் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மறுகணம் விழுந்து விழுந்து சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறாய்? உன்னுடைய மனைவி ஊருக்குப் போன விஷயம் எனக்கு எப்படித் தெரிந்தது என்று நினைத்தா சிரிக்கிறாய்? இதில் என்ன ஆச்சரியம்

கு.க-5