பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


“சரிதான் மனிதனைக் கண்டால் பாம்புக்குப் பயம்; பாம்பைக் கண்டால் மனிதனுக்குப் பயம். பரஸ்பரம் இருந்த பயம்தான் தங்களைத் தாங்களே இவர்கள் கொன்றுகொள்வதற்குக் காரணமாயிருந்திருக்கிறது!" என்று விஷயத்தை விளக்கினான் சித்திரகுப்தன்.

"அப்படியானால் பயம் என்னைவிடக் கொடியது போலும்!" என்றான் எமன் சிரித்துக்கொண்டே. மனிதன் வெட்கத்தால் தலைகுனிந்தான்.

莎莎莎

52. முடியவில்லை!

பொங்கல் நெருங்கிக் கொண்டிருந்தது. கிரகஸ்தர் ஒருவர் தம் வீட்டு வேலையில் மும்முரமாக ஈடுபட் டிருந்தார். அப்பொழுது, "வேலை ரொம்ப அதிகமோ?” என்று நரித்தனத்துடன் கேட்டுக் கொண்டே அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.

"ஆமாம் வேலை ரொம்ப அதிகமாய்த்தான் இருக்கிறது. பழைய சாமான்களையெல்லாம் ஒழித்துக் கொண்டிருக்கிறேன்!” என்றார் அவர்.

வந்தவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இருந் தாலும் சமாளித்துக்கொண்டு,"பழைய சாமான்கள் என்றால் உங்களுக்குப் பிடிக்காத சாமான்களையா?" என்று மேலும் பேச்சைத் தொடர்ந்தார்.

"ஆமாம்” என்றார் கிரகஸ்தர்.

"ஒரு காலத்தில் அவையெல்லாம் உங்களுக்குப் பிடித்த சாமான்களாகவே இருந்திருக்கும். இப் பொழுது......" என்று நண்பர் மேலும் ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.