பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56. தத்துவ ஒத்தடம்

வீட்டில் விளக்கேற்றி வைத்ததும் மூலை முடுக்குகளில் பதுங்கிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிகளுக் கெல்லாம் உற்சாகம் தாங்க முடியவில்லை; 'ஜம்’ மென்று வெளியே கிளம்பி 'ஜிவ்' வென்று மேலே பறக்க ஆரம்பித்தன.

விட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு கிழப் பல்லிக்கு அவற்றைப் பார்த்ததும் நாக்கில் நீர் ஊறிற்று. ஆயினும் விரைந்து சென்று அவற்றில் ஒன்றைப் பிடித்துத் தின்னக்கூடிய சக்தி அதற்கு இல்லை. எனவே அது தன் குட்டியைப் பார்த்து, "குழந்தாய்! பசி காதை அடைக்கிறது; ஒடோடியும் சென்று அந்தக் கரப்பான் களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வந்து தருகிறாயா?" என்றது.

"ஆகட்டும் அம்மா!" என்று சொல்லிவிட்டுக் குட்டிப்பல்லி விரைந்தது; அதே சமயத்தில் பறந்து திரிந்த அலுப்புத் தீர ஒரு கரப்பான் சுவரின் மேல் உட்கார்ந்தது.

அதுதான் சரியான சமயம் என்று எண்ணிக் குட்டிப் பல்லி அதற்குப் பின்னால் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது.

'டபக்' அவ்வளவுதான்; பல்லியின் வாயில் கரப்பான் சிக்கிக்கொண்டு விட்டது. கரப்பான் அஞ்சவில்லை; "நன்றி!” என்று சொல்லி விட்டு அதன் முகத்தைப் பார்த்தது. "யாருக்கு?" என்று கேட்டது பல்லி.