பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


'அப்படியானால் இந்த அரண்மனையில் இப்போது இருப்பவர் யார்?"

"ஜனாதிபதி!"

அவ்வளவுதான் 'அக்கக்கக்' கென்று சிரித்தது மூல தனம். இந்தப் பணாதிபதி இருக்கும் வரை உங்கள் 'ஜனாதிபதியின் அதிகாரம் எல்லாம் செல்லாது அப்பனே, செல்லாது என்று கருவிக் கொண்டே, "சலோ, கண்காட்சிச்சாலை! என்றது மூலதனம் லாபத்தை நோக்கி.

கண்காட்சிச் சாலையை நெருங்கியதும் யாரோ விம்மி விம்மி அழும் சத்தம் மூலதனத்தின் காதில் விழுந்தது. அதைத் தொடர்ந்து, "நண்பா, நான் என்ன செய்வேனடா? அந்த அசட்டு மக்கள் செய்த அக்கிரமத்தைப் பார்!-'ஜனநாயகம், ஜனநாயகம்' என்று சொல்லிக் கடைசியாக அவர்கள் என்னை கண்காட்சிச் சாலைக்கே அனுப்பி வைத்துவிட்டார்கள்; கண்டோர் நகைக்கும் காட்சிப் பொருளாக என்னை மாற்றி விட்டார்கள் என் அழகென்ன, ஆடம்பர மென்ன? அரியாசனம் என்ன, ஆடும் அழகிகள் என்ன? வெண் கொற்றக் குடை என்ன, வெண்சாமரம் என்ன? - எல்லாம் போய்விட்டதா, என் நண்பா!" என்ற ஒலமும் கேட்டது.

'ஐயோ, உனக்கா இந்தக் கதி!" என்று ஒரே தாவாகத் தாவி அதை அப்படியே ஆலிங்கனம் செய்து கொண்டு ஒருகணம் அழுதது மூலதனம். மறுகணம் அதைத் தேற்றி, அழாதே நண்பா, அழாதே! உன்னைக் கண் காட்சிச் சாலைக்கு அனுப்பிவைத்த அந்த மக்களை நான் பழிக்குப்பழி வாங்குகிறேன்!” என்று அது சூள் உரைத்தது.

“எப்படி நண்பா, எப்படி?” என்று தன் அழுகையை நிறுத்தி, ஆவலுடன் கேட்டது மணிமகுடம்.