பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


"உனக்கு நான் சளைத்தா போய்விட்டேன்?" என்று “பீப்பீ, பீப்பீ" என்று தலையை ஆட்டி ஆட்டி வாசிக்க ஆரம்பித்தது நாதசுரம்.

அதற்கும் கூட்டம் கூடிற்று.

"நமக்கு ஏன் வம்பு?" என்று இரண்டுக்கும் சேர்ந்தாற்போல் 'ஒத்து' ஊதி, கூட்டத்தாரின் அனுதாபத்தைப் பெற்றது ஒத்து.

"பார்த்தாயா, இவர்கள் லட்சணத்தை?- பாரதியார் சும்மாவா சொன்னார், "தாளம் தாளம் தாளம்- தாளத்திற் கோர் தடையுண்டாயின்-கூளம், கூளம், கூளம் என்று!" என்றது தாளங்களில் ஒன்று.

"உண்மை; எந்தக் கச்சேரியும் நான் இல்லாமல் சோபிப்பதில்லை!" என்றது இன்னொன்று.

"அதென்ன தம்பி, "நான்" என்கிறாய்?"

"அது அப்படித்தான் அண்ணே, நான் என்றால் நான்தான்!”

"நாசமாய்ப் போச்சு நான் இல்லாமல் உன்னால் தாளம் போட்டுவிட முடியுமா, நான் இல்லாமல் உன்னால் கூட்டம் சேர்த்துவிட முடியுமா?"

"ஏன் முடியாது?-இதோ போட்டுக் காட்டுகிறேன்; கூட்டத்தையும் சேர்த்துக் காட்டுகிறேன்!” என்று துள்ளித் துள்ளித் குதித்தது அது.

"ம், குதி குதி!" என்றது இது.

"நீ ஒன்றும் சொல்லவேண்டாம்!" என்றது இது.

கடைசியாக அந்த ஒற்றைத் தாளத்திற்குக் குதித்துக் குதித்துக் கால் வலித்ததுதான் மிச்சம். ஒசையும் ஒலிக்க வில்லை; கூட்டமும் சேரவில்லை.