பக்கம்:வினோத விடிகதை.djvu/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் துணை.

வினோதவிடிகதை.

வருங்காலங் நிகழ்ந்துரைப்பான் சாஸ்திரியல்ல, வாங்கி யுண்ண வழிகார்ப்பான் முடவனல்ல, கரும்பழுகல் மலா முடிப்பான் சுதனுமல்ல, துகளில் பசும்பால் காப்பான் தோட்டியல்ல, பருமமுடல் நீரணிவான் பரமனல்ல, பலரில்லம் தான் புசிக்கும் பர தசியல்ல, சிறந்தவனக் கிளிபோன்ற மொழியினாளே சீறாவிக் கதையை செப்புவாயே. (விநாயகர்)

கூத்துகனக்கே யலைவான் குடியனல்ல, குலமில்லாக் குலம்பு குந்தான் பிடியனல்ல, வாத்திதனை யேபடிக்கான் வம்பனல்ல, மயில்கோழி மிகவளர்த்தான் புறவனல்ல, தோற்றுந்தேன் தினை யுண்டான் வேடனல்ல, திகழ்வேடந் தான் தரிக்கான் சித்தனல்ல, பூத்த மலர்க்கணையுடையாள் தேவியாளே பெண்மயிலே இக்கதையை புகலுவாயே. (சுப்பிரமண்யா)

காணுவதிற் கண்ணிற்படான் அறைந்து போகான் கண்பூதம் நிகரிடஞ் சஞ்சரிப்பான், பூணுகின்ற வஸ்திரமுந் தனை பரிப்பான் புவியெங்கும் போர் புரிந்துக் கோஷ்டங் கொள்வான், கோணமடை மேருவையும் வேர்பரிப்பான், கொடிபலத் தருக்களையு மொடியச் செய்வான், வேணபேர்க கானந்தம் விளையச் செய்வான், விபரமாயி க்கதையை விளம்புவாயே. (காற்று)

ஈரிரண்டு கம்பமுண்டு பண்டபமுமல்ல, இலை பரித்து குலைவ ளர்க்கும் வாழையல்ல, கோர்கொம்புகளை யேந்தும் வேடனல்ல, கூசாமலே புடைக்கு முறமுமல்ல, தாரகுழை மிகவிருக்குஞ் ஜலதாரியல்ல, கட்டி கறந்தாள் விளக்குந் துடப்பமல்ல, கூறுகின்ற விக்கதையின் பொருளைச் சொன்னால் குருவென்றே ஆயிரம் பொன் கொடுக்கலாமே. (யானை)

கட்டியடித்தே யகற்றுங் கருணையல்ல, கான்மாரிப் பாயவிடும் வாய்க்காலல்ல, வெட்டி மரித்துத் திரும்பும் மடையுமல்ல, விலங் கினத்தின் தோல் சுமக்கும் பொதியுமல்ல, பட்டமுடி தான் தரிக்கும் வேங்கனல்ல, பலநாளுமிருப்பை யுண்ணும் பசி தீராது, துட்டனமன் ஜெயிக்கும் போர் வடியினாளே சுந்தரியே யிக்கதையைச்செப்புவாயே. (குதிரை)

கொண்டையிட்டு தான் மினுக்கும் பெண்டுமல்ல, குலவுமணி கழுத்திலிடும் பூஷணமுமல்ல, துண்டுவெளை கொம்புமுண்டு, மரமுமல்ல, துவரைமரை பில்லுமுண்டு புவனமல்ல, செண்டிப்பூ கொளம்புமுண்டு நதியுமல்ல, செலங்கை கொப்பி தார் தரிக்குஞ் சித்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வினோத_விடிகதை.djvu/2&oldid=1085576" இலிருந்து மீள்விக்கப்பட்டது