பக்கம்:வினோத விடிகதை.djvu/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினேத விடிகதை.

ஒற்றைக்கொம்பி லேறிநிற்கும் பட்சியல்ல, உட்கழுத்தி லரும் புமிட்டு புட்பமல்ல, கொத்துவட மணிதரிக்கும் கொட்டி கடபல்லி ளிக்கும் குரங்குமல்ல, வெற்றிசண்டை தானறியும் மல்லனல்ல, விருத்து கலம் புகுந்து ழலுங் கத்தியல்ல, கொத்து மணித் தாவடங்கள் பூண்டமாதே கோதையரே இக்கதையைக்கூறுவாயே. (சோளம்)

கட்டிகளம் போர்புரியும் வீரனல்ல, காளியெங்குஞ் சுற்றிவருங் கடம்பனல்ல, இட்டமுடன் மனையாலும் புருடனல்ல, இருப்பவர் மேற் துஜந்தொடுக்கும் பித்தனல்ல, சட்ட முடன் குத்துக்கே சளைக்கமாட்டான், சகலருக்கும் வைத்தெரிச்சல் தள்ளிக்கார்ப்பான், அட்டதிக்குச் சுத்திவரும் மதிக்கொப்பான ஆரணங்கே யிக்கதையை மறிந்திடாயே. (நெல்லு)

மஞ்சள் தனை மெய்யணியும் மடைந்தயல்ல, மணம் புணர்ந்தே மயக்கமிடுந் தாதியல்ல, கொஞ்சிபல பேரேந்திக் குழந்தையல்ல, கொற்றவர்களிடம்புகருந் திருவுமல்ல, பிஞ்சகன்மேல் நின்றாடும் பாம்புமல்ல, பிரியமுடன் தனையருத்தம் மதுவுமல்ல, கொஞ்சுகிளி மொழியணங்கே பருவமானே குணமான பிக்கதையைக்கூறுவாயே. (எலுமிச்சம்பழம்)

வழுத்துவே குடலுமுண்டு ஜீவிப்பதல்ல, வரிபிரம்பு முதுகி லுண்டு பிரம்புமல்ல, பழுத்தநிற மேனியுண்டு கிழவனல்ல, பலவி டத்தில் தான் படுக்கும் பித்தனல்ல, குழித்தபெரு வாயருமுண்டு பேழையல்ல, கொடியிட்டே தான் வசிக்கும் வேந்தனல்ல செழித்த மலர் முகத்தாளே மானே தேனே செண்பகமே யிக்கதையை செப்புவாயே. (பூசனிக்காய்)

தலைபெருத்துத் தடிமுழங்கு மகப்பையல்ல, தன்வாயால் மாங் கொத்தும் மாவையல்ல, வலிய புயந்தட்டி யேழும் மல்லரல்ல, வாழ்குலத்தையே யழித்தான் சகுனியல்ல, குலைகளவுக்கே யிசைவான் குரூரனல்ல, குவலயத்தில் நம்மாலே குலைஞ்ஞரானார் சிலையனைய வடிவாளே ரூபவல்லி சீரானயிக்கதையைச்செப்புவாயே. (கோடாலி)

காட்டிவிற்குக் குண்டுண்டு கோலியல்ல, கனியுண்டு வெட்டு ண்டு வங்கமல்ல, வாடியிட்டச் சுருளுண்டு வோலையல்ல வழுத்து களி மண்ணு முண்டு பூமியல்ல, பாட்டியைக்கும் சபைக்கு வரும் பரத்தையல்ல, பலரிடமு முன்னிருந்து பகாச் செய்யும், நாட்டி சலுனக் கீடல்லா நயன மானே நாயகமே மிக்கதையை நாட்டு வாயே. (கொட்டைப்பாக்கு)

கண்டித்தே குழிரிகுவான் குழியுங் கொள்வான் கசக்கி ஜலம் பிழிந்திடுவான், வண்ணானல்ல அண்டிநின்றுத் தானுழல்வார் தாசனல்ல, அகன்றிடுவார் பாமுழல்வார் விலைமாதரல்ல, கொண்டு குடமேந்தி நிற்பார் சோதியல்ல, கூச்ச விட்டே வகுபுகையின் வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வினோத_விடிகதை.djvu/5&oldid=1085581" இலிருந்து மீள்விக்கப்பட்டது