பக்கம்:வினோத விடிகதை.djvu/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினோத விடிகதை.

நீலமுண்டு நக்கனல்ல, இச்சையுடன் சிறையிலிருந் திருடனல்ல, இ னிமைமொழி தான் புகழும் மனிதனல்ல, கச்சைதனக் கேயடங்கா ஸ்எனத்தினாலே காதழியே யிக்கதையைக் கழறுவாயே (கிளிப்பிள்)

கருகருத்த நிறமுடனுங் காலனல்ல, கண்கலந்தே பார்வைகொ ளுங்கபோதியல்ல, திருச்சலெண்ணைக் குடிபுகழும் மடந்தையல்ல, சிறுவரிடம் பரித் துண்ணும் திருடனல்ல, பருப்பரிசைக் கண்டலை வான் பார்ப்பானலல, பார்த்திருக்கக் கொள்ளை கொள்ளுஞ் சிகப்பனல்ல, திருநிலத்தின் நிகறாளே தெய்வமானே தேவியரே யிக்கதையை தெளியச்சொல்லே. (கப்பல்)

மண்ணலைந்து சேர் துவைக்குங் குயவனல்ல, மதித்துவயல் போல் காக்கும் மனிதனல்ல, கண்ணிரண்டு குழிந்து நிற்கும் குருடனல்ல, கற்கோட்டை யுள்ளிருக்கும் வேந்தனல்ல, எண்ணமுடன் பகைஞர் பசியைத் தீர்ப்பான் ஈரைந்து நாமுடையோன் பரமனல்ல பெண்ணனங்கே யிக்கதையின் பயனைச்சொல்லி பக்குவமாய் ஆயி சம்பொன் பரித்திடாயே. (நண்டு)

மரத்திலொட்டியே வசிக்கும் வவ்வாளல்ல, மரவுரியைத் தரித்திருக்கும் யோகியல்ல, சிரசில் கங்கைச் சடையுண்டு முடமுமல்ல, உருவுகொண்ட பருத்திருக்கும் கட்டியல்ல, உச்சியிலே குடுமியுண் செட்டியல்ல, கரத்தின் வளை கலகலென கடையினானே கற்பகமே அற்புதத்தை கண்டிடாயே. (தேன்கூண்டு)

சொத்துக்கே வழிபார்ப்பான் பகையாளியல்ல, குளிநீருக்கே யிசைவான் தபசியல்ல, புத்திரனால் தானிறப்பா னிரண்யனல்ல, போற்றுமலர்க் காசளிப்பான் குபேரனல்ல. நத்தினவனுக்கே நான் குமுகமாயாவான், நந்தன் முகமாய்ப் போற்றியரைப் பெற்றெடுப் பான், சித்தத்தில் யிக்கதையின் பயனைக்கொண்டு சேயிழையே சபைநடுவே சொல்லுவாயே. (வாழைமரம்)

காதல் கொண்டே சாந்தொடுக்கும் மதனுமல்ல காயமெங்கும் வெளுத்திருக்கும் பாண்டுமல்ல, வேதனையாய் சேர்ந்தணையும் புரு டரல்ல, விலைகாட்டி பணம் பறிக்கும் விலக்குமல்ல மாதர்கள் மேல் வீற்றிருக்கும் பணியுமல்ல மணஞ்செய்கே வாழும் மணவாளனல்ல போகமரை கற்றுணர்ந்த பெரியோர் முன்னே பேசினேன் இதன் பொருளை புகல்வீரையா. (மல்லிகைப்பூ)

சோலை கண்டே யுள்ளிருக்கும் மந்தியல்ல துடிசிகப்பு மஞ்சலி டுந் தோகையல்ல, ஆலைவைத்தே யரைக்கவருந் தனவானல்ல அரு ட்சுவை தந் தேயளிக்குந் தேனுமல்ல, கோலுகொண்டுச் சார்விழியும் கள்ளுமல்ல, கொப்பறையிற் கொண்டுவிடும் எண்ணையல்ல, வாலை யெனப் பருவமுள மானே தேனே வண்மையாய் பிக்கதையை வழுத்திடாயே. (கரும்பு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வினோத_விடிகதை.djvu/4&oldid=1085580" இலிருந்து மீள்விக்கப்பட்டது