பக்கம்:வினோத விடிகதை.djvu/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினோத விடிகதை.

யைப் போற்றிரிவதுண்டு சுருதி மரியாதை கெட்டு நடப்பதுண்டு, பள்ளிமயில் போன்ற நடையுடை மானே பொற்கொடியே யிக்கதையைப் பகலுவாயே (பொடி)

விரித்து கீழ் போட்ட தனிற் படுப்பதுண்டு விரைந்தவரை பிடித்ததனில் படைப்பதுண்டு, கரித்து விழ நெருப்பிட்டு, மூட்டலுண்டு கண்கள் புகைந்தெழப் புரட்டிக் கொளுத்தலுண்டு, உரிந்த கடித் தெழுந்து கந்தவுமிநீண்டு, உலகிலிகை யறிவா யுணர்வை யுண்டு, நிருத்தமிடு மபில் போன்ற வழகினாளே நேரிழையே யிக்கதையை நிகழ்த்துவாயே. (சுருட்டு)

முரிப்பதுவும் பார்ப்பதுவும் முகர்வதுண்டு முன்வாயைக் திறக்காமல் நிக்கலுண்டு, விரிப்பதுவும் தூங்குவதும் சேர்ச்கலுண்டு, மெய்வாட்சிக் கண்டுஜலங் குளிப்பதுண்டு, பிரிப்பதுவுங் கட்டுவதுங்கொள்வதுண்டு, பிற்ற முற்றுப்போட்டணிந்துச் சுவல்வதுண்டு, பருத்தமுலை யாரணங்கே பருவமானே பக்குவமா யிக்கதையைப் பகருவாயே. (புகையிலை)

தாயாகிப் பிள்ளையுடன் தனித்து நிற்காள் கட்டாமல் பலரளிக்குக் கொத்துக் கொள்வாள், ஓயாமல் மேல்கீழாய் நின்றுந் தேய்வாள், உள்ள தெல்லாந் தானுருட்டிக் கழுவிச்சோ சொல்லால், வாயாடும் பெண்கள் கையின் வலுவைப்பார்ப்பாள் வனிதையல்லப் புருடனல்ல மற்றோரல்ல, வாயார யிக்கதையின் விபரஞ்சொன்னால் வஞ்சியே யுன்னடியை வணங்குவேனே. (அம்மி)

குலுக்கலுண்டு சிரிப்புண்டு குதிப்பு முண்டு கொத்து மணி முத்துவடங் கொள்வதுண்டு, அலுப்புண்டு வரைப்பதுண்டு வாட்டமுண்டு அரையில் கலை ஒட்டியான மணிவதுண்டு, தலுக்குண்டு மினுக்குண்டு தரிப்புமுண்டு தாசியவள் வேசியுங் கூத்தாடியல்ல, வலைக்குநிகர் விழியணங்கே வஞ்சிமானே வண்மையா யிக்கதையை வழுத்துவாயே. (பதுமை)

குடுவையைப்போல் வாயுமிரு கண்ணுமுண்டு கூரணிந்த வாலுடன் கூண்டைவதுண்டு, சுடுகையறு மன்னமதைக் கொள்வதுண்டு, துலங்குறு நங்கையற்கு ளமர்வதுண்டு, படுக்சைகொள்ள பிறப்படுப்பிற் செல்வதுண்டு, பாகமொடு செய்ததெல்லாம் படைப்பதுண்டு, வடிவமது மிகவுருவாய் உய்த்தமானே மாங்குயிலே இக்கதையை பதித்திடாயே. (அகப்பை)

விதைவிதைக்கப்பாத்தி சலமிறைப்பதுண்டு, வித்துவேர் கழையில்லாக் காய்ப்பதுண்டு, குரைக்காமற் பவிமடித்தே யெடுப்பதுண்டு, குற்றமென்றுங் கொள்ளாமற் கூய்ப்பதுண்டு, உரைத்தனை தானெடுத்துஞ் சமைப்பதுண்டு, உள்ளபடி சுவைக்குமற் றெவ்வகைக்குமுண்டு, கரைபுரளக் காமநீர் பெருகுமானே கண்மணியே யிக்கதையைக் கழறுவாயே. (உப்பு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வினோத_விடிகதை.djvu/7&oldid=1085583" இலிருந்து மீள்விக்கப்பட்டது