௮
வினோத விடிகதை.
கூண்டிலே யிருக்குமது பட்சியல்ல கொழுந்தோடிப் போகுமது யிரை திணணாது, காட்டிலே விட்டு விட்டால் பறந்தே போகும் கனத்த மன்னர் வாசலிலே காவலாகும், ஈட்டிகத்தி பிடித்தவர்க்கு எதிரே நிற்கும் இரவிலே துணையாகுங் காலேயில்லை, நாட்டிலே யிக்கதையை சொல்வாராகில நமக்கவரை குருவென்றே நம்பலாமே. (அம்பு)
தாதுமாதுளைக் கோவைக் கணப்பழம் தண்டில்லாதவோர் தாமரைப்பூத்ததும், நீரில்லாத வேர் பொய்கை கரையின் மேல ஆளில்லாத ரெண்டன்னங்கள் போனதும், காலில்லாதவன் ஓடித்தடுத்ததும் கையில்லாதவன் கட்டியணைத்ததுங், வாயில்லாதவன் தின்றக்கனிப்பழம் கண்ணில்லாதவன் கண்டு மகிழ்ந்ததே. (சொக்கட்டான்)
அதிகாலக்தில் அப்பனை விட்டவள் அறிவுள்ளோர்கள் கையில் அடுத்தவள், வேதனையாகவே மேனிகிழிந்தவள், வெட்டுகள் குத்துகள் கட்டுப்பட்டுண்டவள் ஏது காணிவள் மஞ்சள் குளிக்கிறாள் ஏக் தமைவிட்டுத் தன் மனி மினுக்கிறாள் ஓது சாணிவள் தாசியுமல்லவே உரைத்தவர்க்காயிரம் பொன்னுக் தருவேனே. (பனவோலை)
கங்கை நதிபுனல் மூழ்கிக் கரையிலேறி கதிரவனை கண் டுடலங் காய்ந்து வெற்றி பொங்கு பாடல் சீனியுண்டு ரிஷபமேறி பூலோகம் காக்கவரும் சிவனுமல்ல இங்கிதனை அறிந்து சொல்லும் பெரியோர் தம்மை எப்போதும் குருவென்றே வணங்குவேனே. (கருவாடு)
முன்னாலே யறுப்புண்டு கட்டு முண்டு முனைகுலைந்து பெண்க ளெல்லாஞ் சீச்சீயென்ன பின்னாலே கிழியுண்டு தையனல்லாள் பிடித்திருப்பார் கைக்குள்ளான சுத்தக்காரி சொன்னாலும் போகொஞ்சம் வேலைக்காரி சொகுசான யிக்கதையைச் சொல்லுவீரே. (துடப்பம்)
பிஞ்சுண்டு பூவாது கசக்குங்காயும் வின்னலெனவே யிருக்குங் கொடிகளெல்லாந் துஞ்சிடவே நீரில் விழச் சுருட்டிக்கொள்ளும் சூரியனைக்கண்டாக்கால மலர்ந்திருக்கும் பஞ்சவரு மவருறவு மாலுக்காகார் பாருலகிவிக்கதையை பகருவிரே. (வலை)
பட்டத்து தேவியவள் சொகுசுக்காரி பரிகாயிளங் கொடியாள் பாரின் மீது கட்டுதற்கு மணைப்பதற்குக் கிள்ளுதற்குங் கட்டழகி பொருத்திருப்பாள் காசுக்கென்றால் இட்டமுடனே வருவாள் தாசியல்ல யேந்திழையே யின்னவெளென்றியம்புவாயே. (வெத்திலை)
வினோத விடிகதை.
முற்றிற்று.