14
விபூதி விளக்கம்
14
________________
உ கணபதிதுணை. புறவுரை. "இந்தியா" என்னும் பெயர் வரலாறு. தற்காலம் இந்தியாவென வழங்கும் நாட்டிற்கு சங்க இலக்கி யங்களிலாவது எனைய புராதன நூல்களிலாவது இந்தியாவென வழங்கக் கண்டிலேம். ஆரியர் மொழிபெயர்த்துக் கூட்டியும், கழித்தும், விளக்கியும், திருத்தியும் எழுதிய நூல்களில் இந்தியாவிற்கு பரதகண்டம் என வழங்கக் காண்கிறேம். த ஆரியர் இவ்வித்தியாவிற்கு வருவதற்குமுன் இவ்விந்தியா தனித்தனி 56 தேயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது என அறி கிறோம். ஆரியர் இவ்வித்தியாவிற்கு வருவதற்கு முன்னேயே பினீசி யர்களும், அராபியர்களும், யூதர்களும், பாரஸீகர்களும் தரை மார்க்கமாயும் தண்ணீர் மார்க்கமாயும் தமிழர்களுடன் வியாபாரம் செய்துகொண் டிருந்தார்கள் எனவும் அறிகிறோம். பாரஸீகரும் அராபியரும் பெரும்பாலும் தரைமார்க்கமாய் கைபர், காபூல் கணவாய்களின் மார்க்கமாய் தமிழர்களுடன் வியா பாரம் செய்துகொண் டிருந்தார்கள். உலகத்தில் எந்த இடத்தில் உள்ளவர்களும் மயில் இறகு, மிளகு, சந்தனம், கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, தேக்கு முதலியன வேண்டுமானால் தமிழ்நாட்டிற்குத் தான் வரவேண்டும். பாரஸீகர்கள் ஒட்டை மூலியமாய் பேரீச்சம்பழம், முந்திரிப் பழம், பெருங்காயம் முதலியவைகளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்