பக்கம்:வியாச விளக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- 19 | வடசொற்களின் (அல்லது திசைச்சொற்களின்) முதலில் மெய் வரின், அம்மெய்யின்மேல் ஏற்றதோர் உயிர்க்குறில் ஏற்றப்படும்; அல் வது அம்மெய் சீக்கப்படும். உ-ம். த்ராவகம் - திராவகம் (உயிர் ஏறுதல்) ஸ்தானம் - தானம் (மெய் கெடுதல்) வடசொற்களிலும் திசைச்சொற்களிலும் முதலில் ர, ல, என்னும் எழுத்துக்கள் வரின், அவற்றுக்கு முன் ஓர் ஏற்ற உயிர்க்குறில் சேர்த் தெழுதப்படும். உ-ம். ராமன்- இராமன் ரத்தம் - அரதனம், இரத்தினம் லாபம் - இலாபம் லோபி-உலோபி சோமர், ரொட்டி முதலிய சில சகாமுதற் சொற்களும், எல்லா! யகா முதற்சொற்களும் இயல்பாக எழுதப்படினும் இழுக்கின் று . வடசொற்களின் இடையில், வேற்றுலை மெய்ம் மயக்கில் (அதா வது மெய்கள் தம் உயிர்மெய்யோடு கூடாது பிற உயிர்மெய்களோடு கூடி வரின்), தமிழ் முறைக்கு மாறான மெய்களின்மேல் ஓர் எற்ற குறில் எற்றப்படும் ; இசைந்தவிடத்து அம்மெய்கள் இரட்டிக்கவும் பெறம், உ-ம். பாவம் - பக்குவம் பத்மம் - பதமம் புண்யம் - புண்ணியம் சாவ்யம் - காவியம், காப்பியம் வம்சம் - வமிசம் வடசொற்களின் இறுதியில் வல்லினமெய்வரின், அதன்மேல் ஓர் உரம் ஏற்றி யெழுதப்படும். அப்பொழுது அவ்வல்லினம் இரட்டிக்கும். உ.ம். விராட் - விராட்டு, சத்-சத்து சூடு, சீரகம் முதலிய தூய தென் சொற்களை ஜூடு, ஜீரகம் என்று சொல்வதும், காட்சி, மாட்சி முதலிய செந்தமிழ்ச் சொற்களைக் காக்ஷி, மாணி யென்றெழு. தவறும் சிலர் வழக்கமாயிருக்கின்றது, ஆசிரியர் இதைக் கண்டிக்க. காண் + C = சாட்சி, மாண் + C = மாட்சி, ஆன் + C = ஆட்சி சில மாணவர் காட்V, சாட்க்ஷி என மிகைபடவும் எழுதுவர். இது பெருக் தவறு, தென் சொற்களாயின் ஷாம் வருதலே கூடாது. வட சொற்களாயின் சாட்சி, சாக்கி, சாதி என மூவகையாயும் எழுதலாம். திட்டாத்தம் (திருஷ்டாந்தம்), கிட்டிணன் (கிருஷ்ணன்) முதலிய வடசொற்றிப்புகள் சிறந்தனவல்ல. தென்சொற்கள் வழக்கிலிருக்கும்போது அவற்றுக்குப் பதிலாக வடசொற்களை, வேண்டாது (அனாவசியமாய்) வழங்குவது வழுவாகும்,