பக்கம்:வியாச விளக்கம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அரைப்படித்தவன் - குறைவாகச் கற்றவன் அறப்படித்தவன் - முர்றக்கற்றவன். அல்ல, இல்லை, ஒன்று இன்னொன் றல்லாமையை அல்ல என்னுஞ் சொற்குறிக் கும் ; ஒன்று ஓரிடத்திலின்மையை இல்லை என்னுஞ் சொற் குறிக்கும். உ-ம், அவன் இராமன் அல்ல - He is not Rama. இராமன் இல்பே இல்லை - Rama is not here. அவன் இராமனில்லை என்பது வழு. இதில் இராமன் என்பது இராமனாய் என்று எச்சப்பொருள்படின் வழாநிலை. அவசரம் - Urgency. அவசியம் - Necessity. அளி - ஏ - present கொடு - எ. give. ஊர்கோலம் - ஊரை வலமாகச் சற்றாமல் ஊர்ந்து செல்லல், ஊர்தல் =வாகனத்திற் செல்லல், பையச் செல்லல். ஊர்வலம் - ஊரை வலமாகச் சுற்றுதல். கட்டடம் - binding. setting. construction. கட்டிடம் - building. கருப்பு blackness. கறுப்பு-rage, darkening of the face through anger. குமரன் - இளைஞன், வீரன், குமாரன் - மகன். குமரி - இளையன், வீரி, குமாரி - மகன். குற்றஞ்சாட்டு - accuse. குற்றஞ்சாற்று - tell the crime. சவரஞ்செய்தேன் (பிறர்க்கு). சவரஞ்செய்து கொண்டேன் (எனக்கு). கொள் - Reflexive sign. தகப்பனார் - ஒருமை (உயர்வுப்பன்மை ). தகப்பன் மார் - பன்மை தாழ்மை - humility. தாழ்வு = இழிவு, கீழ்மை. தீஞ்சுவை - இனியசுவை, தீச்சுவை = தீயசுவை . தேன் + சுவை = தேஞ்சுவை, தீஞ்சுவை. தீ (தீமை) + சுவை = தீச்சவை. இத்தகைய தொடர்களில் மெலிதோன்றமிடத்து இனிமைப் பொருள்; வலிதோன்றுமிடத்துத் தீமைப் பொருள், தீன் - தின்பண்டம், தீனி - விலங்குணவு, சாப்பாடு - மக்க ளுணவு. தேர்ந்தெடு ஏ, examine and select. தெரிந்தெடு - ஏ. select, elect. கட்டு - ஏ, fix in the earth. நாட்டு . ஏ, establish.