பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

கடலைக் கடந்து நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்; எனவே கொஞ்சம் அறிவு இருக்க வேண்டும் என்று சொல்லிய நாரைக்கு அழுகையே வங்து விட்டது.

அப்பாவி நாரையே! இரண்டே கால்கள், ஒரே ஒரு யோசனையுடைய சிறிய தலை. இவ்வளவுதானே உன்னிடம் இருப்பது! என்னைப் பார்! நான்கு கால்கள், இரண்டு காதுகள், வாய் நிறைய பற்கள் என் தலையிலோ நூற்றுக் கணக்கான யோசனைகள். ஆழகான, அடர்ந்த வால் இவ்வளவும் என்னிடம் உள்ளன என்றது.நரி.

நாரை மிகவும் வருத்தப்பட்டது. விரக்தியுடன் ஆகாயத்தைப் பார்க்க அலகை மேலே தூக்கியது. அப்பொழுது ஒரு வேடன் வில், அம்புகளுடன் வருவவதைப் பார்த்தது.